ஆட்டிசம்

"ஆட்டிசம்"


சமுதாயத்தில் இன்று பரவலாக அனைவராலும் அறிந்திருக்க கூடிய ஒரு வார்த்தையாக அமைந்துள்ளது.
ஆட்டிசம் என்றால் என்ன என்பதே இன்று பலருக்கு தெரியாமல் இருப்பது தான் மிகுந்த மனவேதனை அளிக்கிறது.குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஆட்டிசம் பற்றி பெரிதாக விழிப்புணர்வு இருப்பதில்லை.


முதலில் ஆட்டிசம் என்றால் என்னவென்று பார்ப்போம்.
ஆட்டிசம் ஒரு நோயல்ல இதொரு குறைபாடு.இதை மருந்துவர்கள் Autism spectrum disorder - ASD என்பார்கள். உலகில் அதிகம் காணப்படும் வளர்ச்சிக் குறைபாடுகளில் ஆட்டிசம் மூன்றாவது இடத்திலும்  தற்போது 1.7 மில்லியன் பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் ஆய்வின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.


குழந்தை முகம் பார்த்து சிரிக்கவில்லை.பேசிய வார்த்தையே திரும்ப திரும்ப பேசுகிறது.தாய் பாலூட்டும் போது குழந்தையின் கவனம் தாயின் கண்களை காணாமல் இருப்பது.மாதங்கள் ஆயினும் பெயரைச் சொல்லியோ அல்லது வேறு எந்தவித சத்தத்தை கேட்டோ குழந்தை திரும்பி பார்க்காமல் இருப்பது.மற்றக் குழந்தைகளுடன் விளையாட மறுப்பது.மற்றக் குழந்தைகளுடன் வேறுபட்டு காண்பது.குழந்தை பேசுவது புரியாமல் இருப்பது.வித்தியாசமான பொருட்களைக் காட்டினால் அதன் மீது தன் கவனத்தை செலுத்தாது இருப்பது‌.மற்றவர்களுடன் பழகும் போது அவர்களின் நடத்தைத் திறன் பழகும் விதம் அனைத்தும் முற்றிலும் மாறுபட்டு காணப்படும்.


இதெல்லாம் தான் ஆட்டிசத்தின் அறிகுறிகள் என்று நினைத்துக் கொள்ளவும் முடியாது.ஏனென்றால் இவையெல்லாம் ஒரு குழந்தையின் இயல்பு வாழ்க்கையில் எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.முடிவு செய்ய முடியும்.ஒரு குழந்தையின் பதினெட்டு வயதிற்குள்ளே ஆட்டிசத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


இதற்கு மருத்துவம் மருந்து எல்லாமே  அன்பு ஆதரவு அரவணைப்பு.பெற்றோர்கள் குழந்தையின் குணம் அறிந்து அவர்களை நெருங்கினால் மட்டுமே குழந்தை அவர்களை நெருங்குவார்கள்.இதில் பெற்றவர்களின் பங்கு மட்டும் தான் முக்கியம் என்பதில்லை குடும்பத்திலுள்ள மற்றவர்களின் பங்கும் அவசியம்.


ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையென்றால் என்ன அவர்களும் ஒரு குழந்தை என்பதை மறக்காது அந்தக் குழந்தைகளுக்கு பேச்சுத்திறன் செயல்திறன் அனைத்தையும் ஆரம்பிக்கட்டத்திலே கற்பித்தால் அவர்களின் வளர்ச்சி விகிதம் மேம்படும்.
பொது இடங்களுக்கு அதாவது கோவில் கடற்கரை பூங்கா அழைத்துச் சென்று மற்றக் குழந்தைகளுடன் அவர்களை விளையாடச் செய்தல் வேண்டும்.


நம் அன்றாட வாழ்வில் காலையில் எழுந்ததும் பல் துலக்குதல் குளித்தல் சாப்பிடுதல் ஆடை அணிதல் போன்ற பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்து அவர்களது பொறுப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.தானாக செயல்படுகிறோம் நான் யாரையும் சார்ந்து இல்லை என்பதை புரிய வைக்க வேண்டும்.


சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பழகுதல் ,கேரம் விளையாடுதல் ,யோகா, தினமும் ஒரு மணிநேரம் பூங்காவிற்கு சென்று அங்கு அமைந்துள்ள விளையாட்டு பொருட்களில் விளையாடுதல் இப்படியான முறைகள் மட்டுமே அந்தக் குழந்தையின் சுயத்தை வெளிக்காட்டவும் தன்னம்பிக்கையுடன் மறுமுறை அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டும். வாழ்க்கையை அவர்களும் வாழ ஆரம்பிக்க முடியும்.
உளவியல் சார்ந்த பயிற்சிகள் அளிப்பதும் நல்லது.


பில் கேட்ஸ்,சர் ஐசக் நியூட்டன்,ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு இன்று உலகமே புகழக் கூடிய மாபெரும்  சாதனையாளர்கள்.ஆகவே ஆட்டிசம் குழந்தைகளுக்கு முறையான கல்வியை அளியுங்கள்.நிறைய கல்வி நிறுவனங்கள் ஆட்டிசம் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.


- கீர்த்தனா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை