கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மோசடி

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கச்சனம் ஊராட்சியில் 1428-ம் பசலி தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் வசதி சங்கத்தின் மூலம் 200 ஹெக்டேர் விளைநிலத்தில் உளுந்து, பயறு சாகுபடி செய்து சேதமடைந்துவிட்டதாக போலி ஆவணங்கள் தாக்கல் செய்து கிராம நிர்வாக அலுவலர், கூட்டுறவு வங்கி செயாலாளர், உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோர் ரூ 50 லட்சம் மோசடி செய்து தொடர்பாக நடவடிக்கை எடுத்து கையாடல் செய்த பணத்தை மீட்க கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார், நாகை பாராளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மோசடி குறித்தும் மோசடி செய்த தொகையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி பேசினார். இதில் மாநில துணைச்செயலாளர்கள் பூமிநாதன் , முருகையன், நாகை தொகுதி இணை செயலாளர் அருள் செல்வன, இஸ்லாமிய பேரவை மாவட்ட அமைப்பாளர் முகமது ஹசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர் .மாவட்ட அமைப்பாளர் ஹேமநாதன் வரவேற்றார், நகர செயலாளர் ஹாஜா நன்றி கூறினார்


 


. செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்