திருத்துறைப்பூண்டி தூய லூர்துஅன்னைஆலயத்தின் திருவிழாகொடியேற்றம்

திருத்துறைப்பூண்டி தூய லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டுவிழா கொடியேற்றதுடன் 02.02. 20. இன்று தொடங்கியது. வருகிற 10ம் தேதி திருத்தேர் பவனி நடைபெறுகிறது.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தூய லூர்துஅன்னைஆலயம் ஆண்டுத் திருவிழாகொடியேற்றதுடன் இன்று தொடங்கியது. லூர்து அன்னைஆலயத்திலிருந்து புனித கொடியை ஊர்வலமாக பழையரயில் நிலையம், நகராட்சி, ரயில் நிலையம் வழியாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு கொடிஏற்றப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


இன்றுதொடங்கி 10 தினங்களுக்கு இந்த திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி வருகிற 10ம் தேதி நடைபெறுகிறது. அன்றையதினம் சிறப்பு ஜெபக் கூட்டங்கள் நடைபெறுகிறது.


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி