மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி
.திருத்துறைப்பூண்டியில் பெரியநாயகி உடனுறை பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் ஏழாம் ஆண்டு மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி மூன்று நாள் பெரு விழா துவங்கியது
திருத்துறைப்பூண்டி ஜிடி பவுண்டேஷன், நாட்டியாஞ்சலி பெருவிழா குழு, சர்வாலய உழவாரப்பணிக்குழு, பாரதமாதா சேவை நிறுவனங்கள் சார்பில் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் ஏழாம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா துவங்கியது.நேற்று திருத்துறைப்பூண்டி பாரதமாதா குழுவினர், மன்னார்குடி மாதவராமன், பெங்களூர் பிரவீன்குமார், சென்னை நந்தினி நரசிம்மன் மற்றும் புதுடெல்லி, திருவாரூர், மதுரை, ஈரோடு பகுதிகளை சேர்த்த பரதநாட்டிய குழுவினர் நடராஜர் சன்னதி எதிரே நாட்டியாஞ்சலி செலுத்தினர். நாட்டியாஞ்சலியில் கலந்து கொண்ட பரதநாட்டிய குழுவினருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் ஜிடி பவுண்டேஷன் தலைவர் டாக்டர் ராஜா ,டாக்டர்கள் தமிழரசி, இந்துமதி, சருண், பாரதமாதா சேவை நிறுவனங்களின் தலைவர் எடையூர் மணிமாறன், சர்வாலய உழவாரப்பணிக்குழு செயலாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாட்டியாஞ்சலி பெருவிழாக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா, உதவி ஆணையர் தமிழ்ச் செல்வி, மேலாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments