பந்து வீச்சில் புதிய யுக்தி

பந்து வீச்சில் புதிய யுக்தி: இந்த வகை கிரிக்கெட்டிற்கு மட்டுமே என்கிறார் ரஷித் கான்


ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். டி20 கிரிக்கெட்டில் முன்னணி பந்து வீச்சாளராக உள்ளார். இவர் கூக்ளி பந்து வீசுவதில் வல்லவர். 6 பந்துகளையும் 6 விதமாக வீசக்கூடியவர். இதனால் அவர் மர்மமான பந்து வீச்சு முறையை கொண்டவர் என அழைக்கப்படுகிறார்.


இந்நிலையில் தனது பந்து வீச்சில் டெஸ்ட் போட்டிக்கென கூடுதலாக ஒரு பந்து வீச்சை முறையை மேம்படுத்தியுள்ளேன் என்று ரஷித் கான் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘வலைப்பயிற்சியில் என்னுடைய சிறந்த பந்து வீச்சை கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அதை கொண்டு வர மாட்டேன். அந்த மாதிரி பந்து வீச்சை டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவில் பயன்படுத்துவேன்.


டெஸ்ட் போட்டி எனக்கு கூடுதல் வாய்ப்பை கொடுக்கும். ஏனென்றால் டெஸ்டில் அதிகமான ஓவர்கள் வீச முடியும். மேலும் அதிகப்படியான நெருக்கடி கிடையாது. ஒரு மோசமான பந்தை வீசினால், அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் டி20 போட்டியில் அந்த பந்து முடிவை மாற்றிவிடும்’’ என்றா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,