இவரை தெரிந்து கொள்ளுங்கள்--- இசையாசிரியை ஈஸ்வரி நரசிம்மன்

இவரை தெரிந்து கொள்ளுங்கள்


இசையாசிரியை ஈஸ்வரி நரசிம்மன்


 


ஈஸ்வரி நரசிம்மன்


 



 


              ஏதோ ஒரு தனித்துவம் இருந்தால் தானே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மீண்டும் மீண்டும் ஓர் இசைப்பள்ளிக்கு அனுப்புவார்கள்? தங்கள் உற்றார், உறவினர்களையும், நண்பர்களையும் இங்கே அறிமுகப்படுத்துவார்கள்? ஆமாம்.. அது ஈஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மியூசிக் பள்ளியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது வரை ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியிருக்கிறார். இந்த இசைப்பள்ளியின் ஆசிரியை ஈஸ்வரி நரசிம்மன்.


     சிறு செடியாய் துளிர்விட்ட இப்பள்ளி ஆலமரமாய் வேரூன்றி தழைக்க ஒரு காரணம் இருக்கணுமே... அது தேங்கிய நீராய் இல்லாமல் ஓடிடும் நதி போல பரந்து விரிந்து பாய சக்தியை தேடித்தேடி தன்பால் ஈர்த்து கொண்டது தான்.


       சக்தி என குறிப்பிட்டது தான் கற்றதோடு நில்லாமல் இசையில் கற்றுத்தேர்ந்த பெரிய பெரிய புலமை வாய்ந்த இசை வல்லுநர்களை தேடி தேடி பயின்று தன்னை உரமேற்றிக் கொண்டது தான்.


      அத்தனை புலமையை கிரகித்து வைத்தால் மட்டுமே இன்னும் இருபது ஆண்டிற்கான பாட திட்டங்களை (சிலபஸ்) திட்டமிட்டு கட்டமைத்து தன் மாணவர்களுக்கான சொத்தாய் மாற்றி வைக்க முடியும்.


           நிதானமாய்.. அதே நேரத்தில் உறுதியாய் இந்த பள்ளி இயங்கி  மாணவர்களை பயிற்றுவித்து தேர்வுக்கு அனுப்பியதில் தொடர்ந்து 100% தேர்ச்சி என்பதில் தான் இப்பள்ளியின் தனித்துவம் அடங்கியிருக்கிறது.


        4வயதிலிருந்து 82 வயது வரை இந்த இசைப்பள்ளியில் மாணவர்கள் பயில்கிறார்கள்.. அரசு துறை அதிகாரிகள்.. ஆடிட்டர்கள்.. ஏராளமான மருத்துவர்கள்.. வழக்கறிஞர்கள் இசைக்கருவிகளை  வாசிக்க வந்து பயில்கிறார்கள். இது அவரவர் துறையில் பணி சார்ந்த மனஅழுத்தத்தை போக்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


 


      கற்றலும் கற்பித்தலும் சடங்காகவோ...மாணவர்களின் மனதில் திணிக்காமலோ அவர்களாகவே ஆர்வத்தோடு பயில இங்கே கற்பித்தல் ஒரு மாயாஜாலம் போல நிகழ்கிறது. மாணவர்கள் மனதில் ஆழ பதியும் வகையில் நேர்த்தியான பகிர்தல் நடக்கிறது.  


    ஆமாம் பகிர்தல்னு தான் சொல்லணும்.. கற்பித்தல் அல்ல.


        இந்த இசைப்பள்ளி ஆசிரியை ஈஸ்வரி நரசிம்மன் சிறப்பு குழந்தைகளுக்கு இசை பயிற்றுவிப்பதில் அலாதி ஆர்வம் உடையவர். அவர் சொன்ன போது.. மற்ற குழந்தைகளோடு சிறப்பு குழந்தைகளை ஒப்பிடும்போது மிக வேகமாக இசையை கிரகித்துக் கொள்கிறார்கள். அவர்களது கிரகிக்கும் வேகத்திற்கு நாம் பாடங்களை பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். சிறப்பு குழந்தைகளுக்கு தனியே நேரம் ஒதுக்கி கற்பிப்பது சவாலானது தான்..ஆனால் அதில் ஒரு மனநிறைவு உண்டாகிறது என்றார்.


இவரது தனித்துவம் இவரது சிறப்பு தகுதி தான்.


கர்நாடக சங்கீதத்திலும்.. மேற்கத்திய இசையிலும் இரண்டிலும் புலமை.


ஒரு நபர் ஏதாவது ஒன்றில் சிறப்பானவராக இருப்பது இயல்பு. ஆனால் இரண்டிலும் சிறப்பாய் தேர்ச்சி பெற்று தேடி தேடி கற்றவர் தன்னைப்போலவே தன் மாணவர்களையும் உருவாக்கி வருகிறார்.


கீபோர்ட்..கிடார்..வீணை.. மூன்று இசைக்கருவிகளையும் கையாண்டு குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கிறார்.


    ஒரே ஆசிரியர் மூன்று வித இசைக்கருவிகள் கற்றுத்தருவது என தொடங்கிய பள்ளி இன்று தேர்ச்சி மிக்க ஆசிரியர்களை கொண்டு ட்ராயிங்.. யோகா.. வாய்பாட்டு என மெருகேறி ஐந்து கிளையாக வளர்ந்திருக்கிறது.


மாணவர்களோடு இயல்பாய் கலந்து தான் கற்றதை  பயிற்றுவித்து அவர்களின் முன்னேற்றத்தில் அகமகிழ்வது தனித்துவம் தானே.


 


இங்கு பயின்ற மாணவர்களில் சிலர் அடுத்த கட்டமாக திரைப்படத்திற்கு ம்யூசிக் கம்போசிங் செய்யும் அளவிற்கு முன்னேறியிருப்பதும் பெருமைக்குரியதே.


         இந்த ஈஸ்வரி இசைப்பயிற்சி பள்ளியின் 20ம் ஆண்டு நிறைவு ஆண்டுவிழா தான் சமீபத்தில் (28.7.2018 )அன்று சென்னையில் சிறப்பாக அரங்கேறியது.


    தன் கடின உழைப்பையும்.. அர்ப்பணிப்பையும் ப்ரதானமாக வைத்து முன்னேற்றம் கண்டுள்ள இந்த இசைப்பயிற்சி பள்ளியின் ஆசிரியை உஜ்ஜைனீஸ்வரி அவர்களின் பூர்விகம் ஸ்ரீரங்கம் ஆகும். இவர் சிறுவயது முதலே இசையில் ஆர்வம் கொண்டு பக்தி பாடல்கள் மற்றும் பஜனை பாடல்களை சுயமாக பாட ஆரம்பித்து பின் இசையை முழுவதுமாக கற்றுக்கொண்டார். இசைக்கருவிகளின் மேல் மிகுந்த நாட்டம் கொண்டதால் பல இசைக்கருவிகளை இயக்கவும் இசைக்கவும் கற்றுக்கொள்வது மிக எளிதாக இவருக்கு இருந்தது . தான் கற்றுக்கொண்ட இசையை எல்லோரும் பகிர்ந்து பயனடைய வேண்டி ஒரு இசை பயிற்ச்சி பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் 1994 ம் ஆண்டு குடும்பத்தாருடன் சென்னை வந்தார் . மிக எளிய நிலையில் உள்ள இவர் மிக சிரமப்பட்டு 1998ம் ஆண்டு இந்த இசைப்பயிற்ச்சி பள்ளியை ஆரம்பித்தார்.


       இந்த இசைப்பயிற்சி பள்ளி சென்னையில் தற்போது கோடம்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது .மேலும் இவரது பயிற்சி பள்ளியின்  கிளைகள் கில்நகர், சூளைமேடு மற்றும் அரும்பாக்கத்திலும் செயல்படுகிறது. தற்போது 5 கிளைகளுடன் விரிவடைந்துள்ள இந்த பள்ளியின் வெற்றிக்கு  காரணமே  இவர்தான்


.



    சிறிது சிறிதாய் அடியெடுத்து வைத்து இன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள்  கற்கின்றனர் ...ஏறக்குறைய 3000 மாணவர்கள் இதுவரை இவரது பள்ளியில் படித்துள்ளார்கள், 


சுயநலமில்லா அர்ப்பணிப்பு ... இவரை  இவ்வளவு தூரம் உயர்த்தியிருக்கிறது.


 


ஆன்லைன் மூலமாக வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார். ஆன்லைன்னில் ஸ்கைப் மூலம் நார்வே நாட்டிலிருந்து பயின்ற மாணவி சமீபத்தில் நடைபெற்ற இப்பள்ளியின் 20து ஆண்டுவிழாவில் நார்வே நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டு தனது திறமையைவெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மாணவர்களின் திறமையை பொதுமக்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அரங்கேற்றிய பெருமையுடன் அடுத்த கட்டத்திற்கு மாணவர்களை உயர்த்த சிறப்பு கவனத்துடன் பயிற்றுவிக்கும் முனைப்பில் இறங்கியிருக்கிறார்.


பொதுவாக இசைப்பயிற்சியாளர்கள் ஏதாவது ஒரு இசைக்கருவியில் தான் நாட்டமாக இருப்பார்கள் ஆ,னால் இவர் key board ( Carnatic and western) guitar and veena என 3 இசைக்கருவிகளையும் வாசிக்கக்கற்றுக்கொண்டதை  மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறார்


இவரது இசைப்ள்ளி 2009ம் ஆண்டு சென்னையின் சிறந்த இசைப்பள்ளிக்கான விருது பெற்றுளளது


Trinity College of London and  Annamali Univesity மூலமாக மாணவர்களை தேர்வுக்கு அனுப்பி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற வைத்துள்ளார்


தற்போது 5 கிளைகளையும் ஒருங்கிணைத்து மேற்கு மாம்பலத்தில் ஒரே பயிற்சி நிலையமாக அமைத்துள்ளார்


அங்கு கூடுதலாக  Drawing  ,vocal , bhjans, slogams  art and craft and yoga ,இவற்றை சிறந்த ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுககு பயிற்சி அளித்து வருவது பாராட்டதக்கது


இங்கு பயிலும் மாணவர்களின் திறமைகளை உலகம் காண வேண்டி easwari fine arts  என்ற  you tube channel ஒன்றை உருவாக்கி மாணவர்களை ஊக்கப்டுத்த வேண்டி அவர்களின் திறமைகளை இந்த சேனல் மூலமாக upload செய்து வருவதால் மாணவர்களும் உற்சாகமடைந்து திறம்பட பயில்கிறார்கள்.


இதை காண இந்த .லிங்க் சென்று வாசகர்கள் காணலாம்


https://www.youtube.com/channel/UC2YNMr0jagfdPfYG8wjF5ZA


மாணவர்களின் திறமைகளை இங்கு பதிவிட்ட வீடியோக்களை கண்டு மகிழலாம்



மேலும் விவரங்களுக்கு இந்த பள்ளியின் மின்னஞ்சல் eswarimusics@gmail.com மூலமாக தொடர்பு கொள்ளலாம் .செல் எண்98403 72616 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்


இந்த இசைப்பள்ளி மேலும் சிறப்பாக வளர்ச்சியடையவும்  பல இசை வல்லுனர்களை உருவாக்கவும் பீப்பிள் டுடே குழுமம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.



 


 


 


By


உமாதமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,