நம்ம கெத்தா ஒலாத்தனும்

நடிகர் விஜய் வீட்டில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரி சோதனை இரவு 8 மணி அளவில் முடிவடைந்து இருக்கிறது.


                சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள விஜயின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயிடம் வருமான வரி அதிகாரிகள் நேரிடையாக விசாரணை மேற்கொண்டனர். அவரை அங்கிருந்து அப்படியே காரில் சென்னை அழைத்து வந்தனர்.


பனையூரில் உள்ள விஜயின் மற்றொரு வீட்டில் அதிகாரிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.


 பிகில் படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளத்தில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளனர். ஆனால், உண்மையில் அவரது சம்பளம் ரூ.50 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.


மேலும், விஜயிடம் இது குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு அதிகாரிகள் அவரது மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.77 கோடியை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை.


மேலும், அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள 38 இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.300 கோடி மறைக்கப்பட்டது கண்டுபிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜயிடம் இருந்து ஒத்த பைசா கூட கண்டுபிடிக்க முடியவில்லை.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,