ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

                               


திருத்துறைப்பூண்டியில் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் ஊராட்சியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொது மக்கள் தங்களுக்கான ரேஷன் பொருட்களை அப்பகுதியில் உள்ள பகுதி நேர அங்காடியில் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆதிரெங்கம் ரேஷன் கடையில் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பல முறை ரேஷன் கடைக்கு அலைவதாகவும், அப்படி பலமுறை ரேஷன் கடைகளுக்கு சென்றாலும் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ரேஷன் கடையில் 234 குடும்பங்களுக்கான ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில் அதில் பாதி பேருக்கு கூட முழுமையாக பொருட்கள் வழங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆதிரெங்கம் பகுதி நேர ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முறைகேடுகளுக்கு காரணமான ரேஷன் கடை ஊழியரை பணியிடமாற்றம் செய்ய கோரியும் கோஷமிட்டனர்.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,