வருகிறது டிஸ்னி

 


                    இன்றைய இணைய உலகில் பெரும்பாலும் அனைவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பார்க்க ஸ்ட்ரீமிங் (OTT) தளங்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் பெரிய பொழுதுபோக்கு நிறுவனங்கள் அனைத்துமே தங்களுக்கெனப் புதிய ஸ்ட்ரீமிங் தளங்களைத் தொடங்கி வருகின்றன.


                   அப்படிக் கடந்த வருடம் நவம்பர் மாதம், கிட்டத்தட்ட பாதி ஹாலிவுட்டை குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கும் வால்ட் டிஸ்னி நிறுவனம் தனது 'டிஸ்னி+' ஸ்ட்ரீமிங் சேவையை அமெரிக்காவில் கொடுக்கத்தொடங்கியது. தற்போது அதை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது டிஸ்னி. ஏற்கெனவே டிஸ்னிக்குச் சொந்தமான ஒரு மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளம் ஒன்று இந்தியாவில் இருக்கிறது. அது எது தெரியுமா?


 


ஹாட்ஸ்டார், டிஸ்னி+


ஹாட் ஸ்டார்தான் அது. அதன்மூலம்தான் மார்ச் 29 முதல் டிஸ்னி+ சேவையை இந்தியா எடுத்துவரவுள்ளது டிஸ்னி. இதுகுறித்து டிஸ்னியின் தலைமை நிர்வாகி பாப் ஐகர் கூறுகையில் ``எங்கள் ஸ்ட்ரீமிங் சேவையை இந்தியாவில் ஐபிஎல் ஆட்டத்தின் ஆரம்பத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் ஹாட்ஸ்டாரில் அதிக மக்கள் பார்க்கக்கூடிய மிக முக்கியமான நிகழ்ச்சியாக ஐபிஎல்தான் திகழ்கிறது. மேலும் இதுவரை உலகம் முழுவதும் 26.5 மில்லியன் சந்தாதாரர்களை டிஸ்னி நிறுவனம் பெற்றுவிட்டது. இந்தியாவிற்கு வரவுள்ள டிஸ்னி பிளஸ்ஸில் இரண்டு முக்கிய வகையான சந்தாக்கள் இருக்கும். ப்ரீமியம் சந்தாவில் ஒரிஜினல் நிகழ்ச்சிகள் உட்பட அனைத்தும் இருக்கும். பேசிக்சந்தாவில் ஒரிஜினல்ஸ் இடம்பெறாது. மேலும் ஹாட்ஸ்டார் ப்ரீமியம் இனி 'Disney plus Hotstar' என்று அழைக்கப்படும் "என்றார்


 


2020-ன் இரண்டாம் பாதியில்தான் டிஸ்னி+ இந்தியாவில் கிடைக்கத்தொடங்கும் எனக் கடந்த ஆண்டே டிஸ்னி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது அதை முன்கூட்டியே தொடங்க தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது டிஸ்னியின் ரசிகர்கள் பலரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்டார்வார்ஸ்'மண்டலோரியன்' தொடங்கி மார்வெலின் சூப்பர்ஹீரோ தொடர்கள் வரை பலவும் டிஸ்னி+ எக்ஸ்க்ளூசிவ் என்பதே அதற்குக் காரணம்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,