சம்மட்டி அடி வாங்கிய இந்திய அணி.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


முதல் இன்னிங்க்ஸில் படுமோசமாக பேட்டிங் செய்து, கடைசி 3 விக்கெட்களை வீழ்த்த முடியாமல் திணறி, இரண்டாம் இன்னிங்க்ஸிலும் சொதப்பிய இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தன் முதல் தோல்வியை பதிவு செய்தது.


நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் தன் நூறாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.


இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியின் டிம் சவுதி 4 விக்கெட் வீழ்த்தினார். அறிமுக வீரர் கைல் ஜேமிசன் 4 விக்கெட்களும், பவுல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர்களிடமே 9 விக்கெட்களையும் இழந்தது.


அடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. நியூசிலாந்து அணியில் டாம் பிளண்டல் 30, கேன் வில்லியம்சன் 89, ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்க்க அந்த அணி 225 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து இருந்தது. அடுத்த 3 விக்கெட்களை இந்தியா விரைவாக வீழ்த்தினால், போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.கடைசி மூன்று விக்கெட்களை வீழ்த்துவதற்குள் நியூசிலாந்து அணி 123 ரன்கள் சேர்த்தது, கிராண்ட்ஹோம் 43, ஜேமிசன் 44, ட்ரென்ட் பவுல்ட் 38 ரன்கள் சேர்த்தனர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 348 ரன்கள் எடுத்தது.183 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கியது இந்திய அணி. 400 ரன்கள் எடுத்தால் மட்டும் வெற்றியை பற்றி சிந்திக்க முடியும் என்ற நிலையில், இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸிலும் பேட்டிங்கில் சொதப்பியது


இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டிம் சவுதி இரண்டாம் இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி, இந்தப் போட்டியில் 9 விக்கெட்கள் சாய்த்தார். நியூசிலாந்து அணிக்கு 9 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது இந்தியா. நியூசிலாந்து அணி அந்த இலக்கை 1.4 ஓவரில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்