மருதகாசி

மருதகாசி



 


இன்று (பிப்ரவரி 13-ந் தேதி) கவிஞர் மருதகாசியின் 100-வது பிறந்தநாள். திரையுலகில் குறிப்பிடத்தக்க பத்துக் கவிஞர்களில் மருதகாசி மிக மிக குறிப்பிடத்தக்கவர்.


. மருதகாசி (பெப்ரவரி 131920 - நவம்பர் 291989தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.


 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.


 


திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. தந்தை பெயர் அய்யம்பெருமாள் உடையார் தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை கும்பகோணம் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். 1940 ஆம் ஆண்டில் திருமணமான இவரின் மனைவி பெயர் தனக்கோடி அம்மாள். மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள்.


மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் "தேவி நாடக சபை"யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார். மு. கருணாநிதி எழுதிய மந்திரி குமாரி போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.


 [


1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்சார் மாயாவதி என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி. ஆர். மகாலிங்கம்அஞ்சலிதேவி இணைந்து நடித்த இந்தப்படத்தை டி. ஆர். சுந்தரம் இயக்கி வந்தார். இந்தப் படத்திற்குத் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். பெண் எனும் மாயப் பேயாம்பொய் மாதரை என் மனம் நாடுமோ என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். இதுவே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.


அதைத் தொடர்ந்து பொன்முடி (1950) படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன்ஜிக்கி ஆகியோர். சுரதாவின் கதை-வசனத்திலும், எப். நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த பாகவதரின் அமரகவி படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி. தொடர்ந்து அவர் எழுதிய சிவாஜியின் தூக்குத் தூக்கி படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.


அந்தக் காலகட்டத்தில் ஜி.ராமநாதன், கே. வி. மகாதேவன்எஸ். தட்சிணாமூர்த்திவிஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.


தேவரின் தாய்க்குப்பின் தாரம் படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு புரட்சிகரமான கருத்துக்களுடன் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே என்ற பாடலை எழுதினார்.


 இயற்கை, சமூகம், தத்துவம், காதல், தாலாட்டு, பக்தி என்று எதைப்பற்றி எழுதினாலும், அதில் தனி முத்திரை பதித்தவர் மருதகாசி. மங்கையர்திலகம் படத்தில் “நீலவண்ண கண்ணாவாடா நீ ஒரு முத்தம் தாடா” என்ற மருதகாசியின் பாடலை யாராவது மறக்க முடியுமா? “முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே” என்று உத்தமபுத்திரன் படத்தில் இவர் எழுதிய பாடல் இன்னும் நம் நெஞ்சில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது.


 


ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை (பிள்ளைக்கனியமுது). கடவுள் என்னும் முதலாளி (விவசாயி). வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே(மல்லிகா). காவியமா? நெஞ்சில் ஓவியமா? (பாவைவிளக்கு). சத்தியமே லட்சியமாய் கொள்ளடா(நீலமலைத்திருடன்). மனுஷனை மனுஷன் சாப்பிடுராண்டா தம்பிப் பயலே(தாய்க்குப்பின்தாரம்). மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏறுபூட்டி(மக்களைப்பெற்ற மகராசி). எடுத்துக் காட்டுக்கு ஒன்றிரண்டைச் சொல்கிறேனே தவிர சொல்வதற்கு நிறைய இருக்கின்றன.


 


எம்.ஜி.ஆர். நடித்த “நினைத்ததை முடிப்பவன்” என்ற படத்தில் பாடல் எழுத முதன்முதல் எம்.ஜி.ஆர் அழைத்துவரச் சொன்னார் என்று டைரக்டர் நீலகண்டன், அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்த ஒரு நண்பரை என்னிடம் அனுப்பியிருந்தார். அப்போது எனக்கு அம்மை போட்டிருந்ததால் என்னால் போக முடியவில்லை. அதனால் பிரபலமான இரண்டு கவிஞர்களை வைத்து எழுதினார்கள். எம்.ஜி.ஆருக்கு அவர்கள் எழுதியது பிடிக்கவில்லை. உடனே மருதகாசியை அழைத்து எழுதச் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர். மருதகாசி எழுதியது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்தப் பாடல்தான் “கண்ணை நம்பாதே. உன்னை ஏமாற்றும்” என்ற பாடல்


இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம்.


 


மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 இலட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.



அவரின் பாடல் இது
படம் உத்தமபுத்திரன்



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,