அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

                          அரசு பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி. திருத்துறைப்பூண்டி தண்டலச்சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி சமூகப்பணி துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


 


 


நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் தங்கராசு தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் திரு வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி சமூகப்பணி துறை உதவி பேராசிரியர் திருமதி நா. ப்ரீத்தி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ராஜம் ஆர்க்கானிக் வேர்ல்ட் உரிமையாளர் திரு ஆர். ரவிக்குமார் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியை ராஜகுமாரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் சித்ரா, சபிதா, வித்யா, யோகேஸ்வரி ஆகி யோர் கலந்து கொண்டனர். ஒன்பதாம் வகுப்பு மாணவன் வெங்கடேசன் நிகழ்ச்சி குறித்து கருத்துரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளராக மாணவிகள் யமுனா, ஜெயந்தி, சிவசங்கரி ,ரேவதி, சுகன்யா ஆகியோர் செய்திருந்தனர்.செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்