வாட்ஸாப்ப் பே. ரெடி

பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், அதன் டிஜிட்டல் பேமெண்ட் சேவையான வாட்ஸ்அப் பே சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யக் கடந்த இரண்டு வருடங்களாகப் பெரிதும் போராடி வருகிறது. ஒருவழியாக இப்பொழுது இந்தியாவில் அதன் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவையைத் துவங்க NPCI ஒப்புதல் வழங்கியுள்ளது.
வாட்ஸ்அப் ஒருவழியாக முக்கிய ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு, அதன் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை இந்தியாவில் வெளியிடத் தயாராகிவிட்டது. வாட்ஸ்அப் அதன் யுபிஐ அடிப்படையிலான கட்டண சேவையை இயக்க தேசிய உரிமக் கழகம் (NPCI) ஒப்புதல் வழங்கியது என்று ரிசர்வ் வங்கியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப்-ன் யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண சேவை ஒரு கட்டமாக மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்படி வாட்ஸ்அப் பே அம்சம் ஆரம்பத்தில் முதல் கட்டமாக சுமார் 10 மில்லியன் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படும். இதற்குப் பின் மிச்சம் உள்ள ஒப்புதல் வழங்கப்பட்டபின் அனைவருக்கும் வாட்ஸ்அப் பே வெளியிடப்படும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,