ஆரோக்கியத்தை காக்க தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்கள்
பண்டைய காலத்தில் மேனி பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்றைய நவீன உலகில் பலரும் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்ப்பதே இல்லை. தேங்காய் எண்ணெயைப் போன்று உடலுக்கு நன்மை செய்யும் ஒரு பொருள் வேறு எதுவுமே இல்லை என்பதே அழகியல் நிபுணர்களின் கருத்தாகும்.
தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.
தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனால் தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும்.
பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இதனால் முகமானது களை இழந்து காணப்படும். தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது. தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது நீங்குகிறது.
அதிகமாக மேக்-அப் போடும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.
கேரள மாநிலத்தில் இன்றைக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அதிகம் உள்ளது. மேனிக்கு உபயோகப்படுத்துவதோடு அன்றாட சமையலுக்கும் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதே அவர்களின் அழகின் ரகசியமாகவும் உள்ளது
சூரிய வெப்பத்தால் ஏற்படும் அழற்சிக்கு சிகிச்சை சூரிய வெப்பத்தால் ஏற்படும் அழற்சிக்கு சிகிச்சை அளித்திட தேங்காய் எண்ணெய்யை தடவுங்கள். வரும் முன் காப்பது தானே சிறந்தது. அதனால் சூரிய ஒளியில் வெளிப்படுவதற்கு முன், உங்கள் சருமம் முழுவதும் தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனால் எண்ணெய்யை தடவுங்கள். மேலும் உங்கள் தினசரி உணவில் கூட தேங்காய் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். சரும சுருக்கங்களை தடுக்கும் தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்திற்கும் அதிக நன்மையை அளிக்கிறது. இயற்கையான மாய்ஸ்சுரைசராக விளங்கும் இது உங்கள் சருமத்திற்கு நீர்ச்சத்தை அளித்திடும். அமைதிப்படுத்தும் பண்பை கொண்ட தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளதால், சீக்கிரமே வயதாகும் செயல்முறையை எதிர்த்து போராடும். குழந்தையை போன்ற மென்மையான சருமம் வேண்டும் என்றால், தேங்காய் எண்ணெய்யை கொண்டு வாரம் இருமுறையாவது மசாஜ் செய்யுங்கள். உங்கள் உணவிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெயில் இவ்வளவு பயன்கள் உள்ளது என என்றாவது நினைத்து பார்த்துள்ளீர்களா? தேங்காய் எண்ணெய்யை சரியாக பயன்படுத்தினால், உங்கள் வீட்டில் இருந்த படியே பலவித பிரச்சனைகளுக்கு நீங்கள் நிவாரணம் காணலாம். அதனால் தேங்காய் எண்ணெய்யை இன்று முதல் பயன்படுத்த தொடங்குங்கள்
ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
Comments