ஒன்னுமே புரியல உலகத்திலே.
நா ன் தூத்துக்குடிக்கு போனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் என்னைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள்.. 2018ம் ஆண்டு ரஜினி பேசிய பேச்சு.. நான் தூத்துக்குடிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.. இது இப்போதுரஜினி பேசிய பேச்சு.. இரண்டையும் பேசியவர் ஒருவரேதான்.. ஆகா அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
எப்பவுமே ஒரு தெளிவில்லாத தனது செயல்பாடுகளால் மக்களை குழப்பத்திலேயே வைப்பதில் வித்தகர்
இப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக இவர் பேசிய பேச்சுக்காக நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.சட்டத்தை மதிப்பவர், சட்டப்படியே நடப்பவர், சட்டம் ஒழுங்கு குறித்து அக்கரை கொண்டவர் என்பதால் கண்டிப்பாக ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி பக்காவாக விளக்கம் கொடுப்பார் என்று மக்கள் எதிர்பார்த்தனர்
கடந்த 2018ம் ஆண்டு அளித்த கோபாவேச பேட்டியும் கூட வைரலாகி வந்தது. மறுபடியும் அதை மக்கள் நினைவுபடுத்தி பார்த்து வந்தனர்.
நான் அங்கு வர முடியாது. வந்தால் ரசிகர்கள் கூடி விடுவார்கள். கூடினால் சட்டம் ஒழுங்கு ஏற்படும். எனவே நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கு நான் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி ஆணையத்தில் திடீரென ஒரு மனு செய்துள்ளார் ரஜினி
எப்போதும் தெருவில் வைத்து அளித்த ஒரு பேட்டியின்போது கூட , ஆணையம் என்னை விசாரித்தால் நான் அங்கு முறைப்படி விளக்கம் தருவேன் என்று சிரித்தபடி பதில் அளித்த ரஜினி ஏன் தூத்துக்குடிக்குச் சென்று விளக்கம் தர யோசிக்கிறார் என்று நமக்கும் புரியல மக்களுக்கும் புரியவில்லை. வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று அவர் கூறுவதுமிக பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2018ம் ஆண்டு மே 30ம் தேதி வழக்கம் போல தெருவில் பேட்டி கொடுத்தபோது தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்கிறேன். நான் வந்து பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவர்கள் என்று சந்தோஷமாக கூறி விட்டுக் கிளம்பியவர்
இப்போது அவர் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ள விஷயம் அப்படியே முரண்பாடாக உள்ளது. அதாவது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னைப் பார்த்தால் அமைதி அடைவார்கள், ஆறுதல் பெறுவார்கள், மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறிய ரஜினி தான் வந்தால் ரசிகர்கள் திரள்வார்கள், திரண்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று கூறியிருப்பது அந்த ரசிகர்களை குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவே தோன்றுகிறது.
ரஜினி ரசிகர்கள் என்ன வன்முறையாளர்களா.. அல்லது ரஜினிக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில் கலவரம் செய்யக் கூடியவர்களா என்று தெரியவில்லை. ரஜினி வந்தால் அவர்கள் மகிழ்ச்சி தானே அடைவார்கள்.. தலைவா என்று குரல் கொடுத்து உற்சாகம்தானே அடைவார்கள்.. தெரிந்தோ தெரியாமலே தனது ரசிகர்களை ரஜின தவறாக எண்ணி விட்டார் என தெரிகிறது. ஒரு வேளை நீங்க யாருன்னு கேட்பாங்க என நினைக்கறார் போல.
இப்படி ஒரே ஒரு இடத்திற்கு தான் போனாலே சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றால் இவர் கட்சி ஆரம்பித்த பிறகு எப்படி ஊர் ஊராகப் போவார்.. மக்களை எப்படி சந்திப்பார்.. இவர் போகும் இடமெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் தமிழகம் என்னாவது என்ற கவலையும் அயர்ச்சியும் மக்களுக்கு வருகிறது! நமக்கு இப்பவே தலை சுற்றுது.
ஒன்னு நிச்சயமா தெரியுது இப்படி மாறுபட்டு பேசி தன்னை பற்றி எப்போதும் மக்கள் பேசணும். மீடியாக்கள் எழுதனும் என்கிற மனநிலையில் இருப்பது போலவே எல்லோருக்கும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இப்படி பேசிக்கொண்டு இவர் போனால் சுப்பிரமணிய சுவாமி. ராஜா வரிசையில் இவரும் இருப்பார் என எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டனர்
Comments