இன்றைய    முக்கிய செய்திகள் 

   இன்றைய


   முக்கிய செய்திகள் 
   """"""""""""""" """""""""""""""""


                                     *   நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வினய சர்மா கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.


======================


சொத்துவரி  உயர்வை நிறுத்திவைக்க முடிவு செய்தது ஏன் என்பது குறித்து சென்னை மாநகராட்சி இன்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


---------------------


வங்காள விரிகுடா மண்டலத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில், BIMSTEC உறுப்பு நாடுகளின் இரண்டு நாள் உச்சிமாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்று புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்.


================


தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு கன்னட கூட்டமைப்பு இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளது.


================


சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர வழிபாட்டுக்காக இன்று நடை திறக்கப்படுகிறது.


===================


பழனியில் ரோப்கார் சேவை நிறுத்தம்..!


மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக  இன்று ( 13.02.2020 ) மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக  பழனி முருகன் திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது


====================..


இன்டேன் கேஸ் சிலிண்டர் விலை கடுமையான உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் சார்பாக இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


\================


ஷாங்காயில் இருந்து சிங்கப்பூர் வழியாக கொல்கத்தாவிற்கு நேற்று வந்த கப்பலில் உள்ள பத்தொன்பது சீன ஊழியர்கள் சாகர் தீவில் தனிமைப்படுத்தப்பட்டு தெர்மல் ஸ்கேனிங் சோதனைக்கு பிறகு கொல்கத்தாவிற்குள் அனுமதிக்கப்பட்டனர்


சீனக் குழுவிற்கு இன்று மீண்டும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்படும்


\======================


நான்கு நாள் பயணமாக போர்ச்சுக்கள் நாட்டின் அதிபர் மார்சீலோ ரெபோலோ டி சௌசா இன்று இந்தியா வருகிறார்.


=======================


ஐரோப்பிய யூனியன் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த 25 பிரதிநிதிகள் ஸ்ரீநகர் வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள பொது மக்கள் மற்றும் வணிகர்களை இன்று சந்திக்கின்றனர்.


===============


இன்றைய பெட்ரோல், டீசல் விலை


பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி லிட்டர் ரூ.74.73-க்கும், டீசல் 5 காசுகள் குறைந்து ரூ.68.45-க்கும் விற்பனை.
__________


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,