ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் மாநிலம் தமிழ்நாடுதான்

ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் மாநிலம் தமிழ்நாடுதான்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்


ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் மாநிலம் தமிழ்நாடுதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.


கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசின் தொழில் துறைக்கும் 'சியட்' நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் 4000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.இந்த விழாவில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இந்த நிறுவனம் மூலம் 10 ஆண்டுகளுக்குள் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, "ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் மாநிலம் தமிழ்நாடுதான். சில மாநிலங்கள் சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னிலை வகிக்கின்றன. சில மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி என துறைகள் தோறும் சிறப்பிடம் பெற்று, அனைவருக்குமான வளர்ச்சியைத் தொடர்ந்து உறுதி செய்யும் மாநிலம் தமிழ்நாடு" எனத் தெரிவித்தார்.


அண்மையில் 'ஃபோர்ட்' நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை