கோலாகலமாக நடைபெற்ற தஞ்சாவூர் கோயில் குடமுழுக்கு
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து வானுயுயர்ந்த விமான கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. உலகப் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாக திகழும் இக்கோயில் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உலகப் புகழ் பெற்று விளங்கி வருகிறது. சோழர்களின் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் இருந்துவரும் இக்கோயிலின் கட்டுமானத்தை எண்ணி உலக மக்கள் அனைவரும் அதிசயித்து வியந்து வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க பெரிய கோயில் குடமுழுக்கு 1997-ம் ஆண்டு நடைபெற்றது
அதன்பிறகு கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என ஆன்மிக ஆர்வலர்கள், பெரிய கோயிலின் மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தனர். அதன்படி 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் விமரிசையாக லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
Comments