கடலும், கடற்கரையும் எங்களுக்கே
திருத்துறைப்பூண்டியில் ஏஐடியூசி மீனவர் தொழிற்சங்கம் சார்பில் கடலும், கடற்கரையும் எங்களுக்கே என்பதை வலியுறுத்தி கடலோர மாவட்டங்களில் நடைபெறும் பிரச்சார பயணம் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார், குறிஞ்சி சங்கர், பசூல்ரகுமான் முன்னிலை வகித்தனர். மீன்வள தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சின்னத்தம்பி மீனவர் கடலோர பிரச்சார பயணம் நோக்கம் குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், மாவட்ட குழு ராமதாஸ், கலைவாணி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பிரச்சார பயண கூட்டத்தில்
கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணை 2019 திரும்ப பெற வேண்டும், மீன் பிடி தொழிலுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், மீனவர்களுக்கு நாடுமுழுவதும் ஒரே அடையாள அட்டை வழங்க வேண்டும், மீன் பிடி தொழிலை பாதிக்கும் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments