உயிர் பெற்ற ரவி வர்மா ஒவியங்கள்

உயிர் பெற்ற ரவி வர்மா ஒவியங்கள்


 


   நார்வே நாட்டில் வசிக்கும் எழுத்தாளர் , கவிஞர் மற்றும் பரத நாட்டிய கலைஞருமான கவிதாலட்சுமி  


தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நன்கு பரிச்சயமானவர் இவரின் தமிழ்  படைப்புகள்  ,பல புதிய சிந்தனைகளை கொண்டது


இது பற்றி இன்னொரு அறிமுகத்தில் சொல்கிறேன்


பரத நாட்டியம் பயின்ற இவரின்  பரத நாட்டிய நடன அசைவுகள் முகபாவங்கள் மிகவும்  நம்மை ஈர்க்கிறது


பல பரத நாட்டிய நிகழ்ச்சிகளை  உலகில் பல இடங்களில் நடத்தியுள்ளார்  .இவரின் ஒரு வித்தியாசமான  சிந்தனையே ஒவியர் ரவிவர்மாவின் சித்திரங்களை நடனமாக வடிவமைத்து  நடனமாடவேண்டும் என்பதே .


     இந்த சிந்தனைக் கு  நார்வே நாட்டில்  வசிக்கும் மேக்கப் ஆரட்டிஸ்ட் நளாயினி வடிவமைத்து கொடுக்க 2018ம் ஆண்டு கவிதாலட்சுமி  அவர்கள் ரவி வர்மாவின்  நான்கு ஒவியங்களுக்கு மாடலாக மாறினார்


     2018ல் இவர்கள் சமூக வலைதளங்களில்  இந்தப்படங்களை வெளியிட்டனர் . மேக்கப் ஆரட்டிஸ்ட் நாளயினியின் கை வண்ணத்தால் ரவி வர்மாவின் ஒவியங்களாக  கவிதாலட்சுமியே  மாறினார் என சொல்ல வேண்டும்


ரவி வர்மாவின் ஒவியங்கள்  உயிரோடு  வந்தது போல இருந்ததது  என பலர் அன்று தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்,


  2018 ல் கவிதா லட்சுமி அவர்களும்  மேக்கப் ஆரட்டிஸ்ட் நளாயினி அவர்களும்  மிக பாடுபட்டு ரவி வர்மாவின் ஒவியங்களுக்கு  உயிர் கொடுத்தார்கள் என்றால் அது மிகையாகாது


 


ஆனாலும் உலகளவில் பெரியதாக இவர்களது கலைப்பணி பெரிதாக பேசப்படவில்லை மற்றும் அறியப்படவில்லை


பல் வேறு காரணங்களினால் அந்த  ரவி வர்மாவின் ஒவிய நடன புராஜக்டை உடனே  செயல்படுத்த இயலவில்லை எனவே மக்கள் அதைப்பற்றி  மறந்தே போயிருக்கக்கூடும் என மிக வருத்த்துடன்  தனது எண்ணங்களை கவிதாலட்சுமி  நமக்கு பகிர நமக்கும் அந்த வருத்தம் தொற்றிக்கொண்டது


 


  சினிமா நட்சத்திரங்கள்  ரவி வர்மா ஒவியங்களுக்கு  மாடலாக ஒப்பனை செய்து சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மிகவும் ரசிக்கப்பட்டு வர நம் எண்ணங்களை புரிந்து கொண்டு நாம் கேட்கும் முன்


‘நார்வே மிக சிறிய நாடு அங்கு வாழும் தமிழர்களும் குறைவு என்பதால்   இந்த அரிய கலைப்பணி உலகளவில் தெரியாமல் போய்விட்டது என சொல்லலாம்.


தமிழ்நாடு மற்றும தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடந்திருந்தாலோ  இது பற்றி தெரியபடுத்தியிருந்தாலோ  பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்’ என்கிறார் கவிதா லட்சுமி


இவர்களின் புராஜட்களுக்கு போதிய விளம்பரம் ஸ்பான்சர்கள் நார்வே போன்ற சிறிய நாடுகளில் கிடைப்பது மிக அரிது என இவர் சொல்வதும்  உண்மையே


இதில் மிகவும் முக்கிய பங்கு  வகிப்பவர் மேக்கப் ஆரட்டிஸ்ட் நாளாயினி அவர்களே


ரவி வர்மாவின் ஒவியமாகவே கவிதா அவர்களை மாற்றியவிதம் மிகவும் பாராட்டதக்கது.


அந்த அளவிற்கு அவருடைய ஒப்பனை திறமை உள்ளது.


இவர் தமிழ் நாட்டில் பிறந்திருந்தால்  மிகப்பெரியஅளவில் பிரபலமாகியிருப்பார், அந்த அளவுக்கு அவரின் திறமையை  நாம் பார்க்கிறோம்.


நார்வே போன்ற சிறிய நாட்டில் அவர்களின் இந்த ஒப்பனை  பணி மிகவும் பாராட்டதக்கது


கலைப்ணிக்கு அர்ப்பணித்து கொண்டுள்ள  இந்த நங்கைகளின் இனி வரும் புராஜக்டடுகளை. நாம் வரவேற்போம்,உற்சாகப்படுத்துவோம்


இந்த நங்கைளின் எதிர்கால கனவுகள் மிகப்பெரிய வெற்றியடைய பீப்பிள் டுடே தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.


(உயிர் பெற்ற ஒவியங்கள் என்பதற்கு பதில் உயிர் கொடுத்த நங்கைகள்னு தலைப்பு கொடுத்திருக்கனும்னு நீங்க சொல்றது கேட்குது)


 


2018ல் கவிதாலட்சுமி அவர்கள்  ரவிவர்மா ஒவியங்களுக்கு  மாடலான புகைப்படங்களை இங்கு  காணலாம்



 .இது SLHaldankar அவர்களின் ஒவியம்


 


 


மாடலிங் மற்றும் கிராபிக்ஸ்  :கவிதாலட்சுமி (நார்வே)


மேக்கப் : நளாயினி (நார்வே)


இவர்களை கீழ்க்கண்ட மின்னஞ்சல் மூலம்  தொடர்பு கொள்ளலாம்


Contact mail id of kavithalakshmi : kavithanorway@gmail.com


Email id of Nalayini:Nalamoha@gmail.com


 


--உமாதமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,