ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நெல்லை மாவட்டத்தில் அமலுக்கு வந்தது.

                 ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நெல்லை மாவட்டத்தில் அமலுக்கு வந்தது. பொதுமக்கள் தாங்கள் விரும்புகின்ற ரேஷன்கடையில் பொருட்கள் வாங்கி சென்றனர். சில கடைகளில் பி.ஓ.எஸ். எந்திரத்தில் பதிவு செய்வதற்கு இணையதள வசதி கிடைக்காததால் பொருட் கள் வழங்க முடியவில்லை. அனைத்து கடைகளுக்கும் என்ஜினீயர்கள் சென்று காலை முதல் பி.ஓ.எஸ். எந்திரத்தில் பொருட்கள் வழங்குவதற்காக பெயர்வு விற்பனை என்ற செயலியையும், அதற்கான சாப்ட்வேரையும் இணைத்து வருகிறார்கள். இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.

 

           இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கோரம்பள்ளம் அமுதம் ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார்.

 

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது;-

 

தமிழக அரசு உத்தரவின்படி தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் தொடங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 957 ரேஷன் கடைகளில் சுமார் 4 லட்சத்து 93 ஆயிரத்து 842 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் மாதம்தோறும் பதிவு செய்யப்பட்ட ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொண்டு வந்தார்கள். தற்போது, இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டை எந்த ரேஷன் கடைகளிலும் காண்பித்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டம் செயல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை ஆராய்ந்து தீர்வு காணப்படும். ரேஷன் கார்டுதாரர்கள் மண்எண்ணெய் மட்டும் தாங்கள் பதிவு செய்து உள்ள ரேஷன் கடைகளில் பெற வேண்டும். அரிசி, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,