நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி:


எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் கடைசி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு தேர்தலையொட்டி பல்வேறு சாதகமான பலன்கள் கிடைக்கும் என்று பலத்த எதிர்பார்ப்புடன் மக்கள் இருந்தனர். ஒபிஎஸ் தான் நிதியமைச்சராக இருக்கிறார் இவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டு வறட்சி மாநிலமாக அறிவிக்கவேண்டுமென தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டமாக நடந்தது. அப்போது விவசாயி மகாலிங்கம் போராட்டக்களத்தில் உயிரிழந்தார். அதன்பிறகு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச்சுவார்த்தையில் தமிழ்நாட்டை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று சென்னை நீங்களாக தமிழ்நாடு முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என ஒபிஎஸ் முதல்வராக இருந்த போது அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டது ஆனால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வதற்கு மாறாக நீண்டகால கடனாக மாற்றி அமைக்கப்பட்டது. அந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கையோடு இருந்த விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து மிகப்பெரிய தலையாய பிரச்சினை வேலையின்மை பிரச்சினை ஏறத்தாழ 1 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் ஆனால் வேலைவாய்ப்பை உருவாக்க எந்த திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் நிதிநிலை அறிக்கையில் இல்லை அதற்கு நிதி இதற்கு நிதி என்று அறிவிக்கும் வெற்று அறிக்கையாக இந்த நிதி நிலை அறிக்கை உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் குறிப்பாக நிதி விஷயங்களில் மத்திய அரசைத்தான் முழுவதுமாக மாநில அரசு நம்பியிருக்கிறது. மத்திய அரசு ஜிஎஸ்டி வரி உயர்த்திய பிறகு வரிகளை வசூல் செய்துகொண்டு எல்லா மாநிலங்களுக்கும் நிதி பாக்கி வைத்திருக்கிறது தமிழ்நாட்டிற்கும் பாக்கி வைத்திருக்கிறது தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி மட்டுமல்ல ஏராளமான நிதிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏனைய நிதிகளையும் வழங்க வேண்டியதிருக்கிறது. அமைச்சர்கள் டெல்லிக்கு செல்கிறார்கள் நிதியமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து எங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுங்கள் என்று பிச்சைக்காரர்களை போல அங்கே கையேந்தி நிற்கிறார்கள் அவர்கள் கொடுத்த பாடாக இல்லை அவர்களை நம்பி இருக்கக்கூடிய அரசாங்கமாக மட்டுமல்லாமல் அவர்கள் தருகிற நிதியை கொண்டு ஒராண்டுகாலத்திற்கு நிர்வாகத்தை நடத்தலாம் என்று மத்திய அரசை எதிர்பார்த்திருக்கிற இந்த சூழலில் இந்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்ககூடிய நிதிநிலையறிக்கையாகும் என்றார்.


செய்தியாளர் பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்