நான் சிரித்தால். திரை விமர்சனம்..

நான் சிரித்தால்...


 திரை விமர்சனம்..துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்றார் வள்ளுவர். ஆனால் அது எப்படி தனக்கு துன்பம் வரும்போது அவர்களால் சிரிக்க முடியும் என சிந்திப்பவர்களுக்காகவே இந்த படம்


          . பாடகரும், இசைமைப்பாளருமான ’ஹிப் ஹாப் தமிழா’ ஆதி மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்த தமிழ் ரொமாண்டிக் – காமெடி படமான ‘நான் சிரித்தால்’ படத்தை இயக்குநர் ராணாஇயக்கியிருக்கிறார்.


 நடிகர்கள்: 'ஹிப்ஹாப்' ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார் படவாகோபி.யோகிபாபு.


          சென்னையில் கொலைவெறிகொண்ட தாதாக்களிடம் கோக்குமாக்காகச் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன் அழவேண்டிய நேரத்தில் அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிடும் பிரச்சினை கொண்ட ஹீரோ, வில்லன் களிடம் இருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான், 'நான் சிரித்தால்'படமாக நம்மை சிரிக்க வைக்கிறது.


             ஹீரோ ஆதிக்கு விசித்திர பிரச்னை. அவர் நிறைய பிரச்சினைகளை சந்தித்தால் அவருக்கு அழ வேண்டிய இடத்தில் சிரிப்பு வந்துவிடும். பதட்டமானாலோ, அதிகமாக கவலையானாலோ, சிரிக்க ஆரம்பித்துவிடுவார். கண்டபடி. கண்ட்ரோல் இழந்து, இதனாலேயே பிரச்னைகள் பல அவருக்கு ஹலோ ஆதியா என அவரை தேடி வருகிறது, தல படத்தை பார்க்க போய் அஜித் அழும் காட்சிகளில் இவர் சிரிக்க, ரசிகர்களிடம் சிக்கிச் சிரிக்கிறார். அப்படியே விஜய் படத்துக்கு போன இடத்திலும் நடப்பது, சிரிப்பு ரகளை


                    ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனுக்கு அதிக காட்சி இல்லை. ஹீரோயின்கள் செய்யும் காதல் வேலையை மட்டும் செய்துவிட்டு தன்பங்கை முடித்துக்கொள்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் காந்திக்கு (ஆதி) ஒரு விசித்திரமான பிரச்சனை. ஏதாவது துக்கமோ, பிரச்சனையோ ஏற்பட்டால் தாங்கமுடியாமல் சிரிப்பு வந்துவிடும். இந்த நிலையில், அவர் தனது பட்டப் படிப்பையே முடிக்காததால், ஐடி நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்படுகிறார். இதனால், அவரது காதலும் சிக்கலுக்குள்ளாகிறது. இதற்கிடையில், ஆதி தன் நண்பர்கள் குரூப்பில் இருக்கும் ஒரு நண்பனை காணவில்லை என தேடி போகுமிடத்தில் சக்கரை (ரவி மரியா) - தில்லிபாபு (கே.எஸ். ரவிக்குமார்) என்ற இரண்டு தாதாக்கள் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்கிறார்கள். தில்லிபாபுவைக் கொல்ல சக்கரை மூன்று ரவுடிகளை அனுப்பி வைக்க, அவர்கள் செல்ல வேண்டிய கார் மாறிப்போவதால், காந்தியும் அவனது நண்பர்களும் தில்லிபாபுவிடம் சிக்குகிறார்கள். தாதாக்களிடமிருந்து காந்தி எப்படி தப்பித்தார், காதல் கைகூடியதா என்பது மீதிப் படம்


           . 'கெக்க பிக்க' விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த ஒரு குறும் படத்தை அதன் கதையையே முழு நீளப்படமாக எடுத்து முயற்சி செய்து இருக்காங்க.


                  படம் துவங்கும்போது, டைட்டில் போடுறப்பவே பின்னணியிலேயே தாதாக்களின் மோதல் குறித்து சொல்கிறார்கள். அதைப்பார்த்துமே, தாதாக்களின் மோதல்தான் கதையாக இருக்குமோ என்று நினைக்கும்போதே, கதாநாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் காட்சிகளும் பாடல்களும் வருகின்றன. அந்தக் காதலும் அதில் வரும் பிரச்சனைகளும்தான் படமோ என்று யோசிக்கும் போதே கதாநாயகனுக்கு சிரிக்கும் பிரச்சனை வருகிறது. துன்பம் வரும் வேளையில் சிரிங்கனு சொல்லினார் தான். அதுக்காக அடுத்தவர்கள் துன்பம் படுறதை பார்த்து சிரித்தால் அடி உதை தான் கிடைக்கும். அதனால் அவரது வேலையும் பறி போய்விடுகிறது. ஒருவரின் சிரிப்பிற்கு பின்னாலும் சோகம் இருக்கிறது என்பதை விளக்கும் கதை. நட்பு, ஆக்‌ஷன், ரொமான்ஸ், பேமிலி சென்டிமென்ட் என அனைத்திலும் காமெடி கலவை பூசி இருக்கிறார்கள்.


                             படத்தில் தேடிக்கொண்டு இருக்கும் நண்பர் தில்லிபாபு வாக வரும் யோகிபாபு டாக்டர் கேரக்டரில் வரும் பாண்டியராஜன் போன்றோரை இன்னும் சரியாக பயன்படுத்தி இருக்கலாம். படவா கோபி அப்பாவாக அப்லாஸ் அள்ளி கொள்கிறார். அசந்து தூங்கினடா அதான் எழுப்ப மனசு வரலைனு சொல்லும் அம்மா கதாபாத்திரம் கச்சிதம். நான் சிரித்தால் சிந்திக்க வைக்கும் படம்.


 சிறப்பு சிரிப்பு படம்.


--மஞ்சுளா யுகேஷ்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,