அய்யோ பாவம்

தர்பார்’ நஷ்டம் தொடர்பாக ரஜினி சந்தித்துப் பேசாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விநியோகஸ்தர்கள்ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியான படம் ‘தர்பார்’.


ரஜினி படம் என்பதால் முதல் வாரத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இருந்தாலும், நாட்கள் போகப்போக படத்தின் வசூல் குறைந்தது. இதனால், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்மடைந்ததால் கடந்த ஜனவரி 30-ம் தேதி ரஜினியைச் சந்திக்க விநியோகஸ்தர்கள் முயன்றனர். ஆனால் ரஜனி கண்டு கொள்ளவில்லை


ரஜினி அழைப்பார் எனப் பொறுமையுடன் அவர்கள் காத்திருக்க, கடைசிவரை அழைக்கப்படவில்லை. எனவே, (பிப்ரவரி 3) போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்குச் சென்றபோது  அவர்களை உள்ளே விடாமல் அங்கிருந்த காவல் துறையினர் தடுத்தனர்.


செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய திருநெல்வேலி, கன்னியாகுமரி விநியோகஸ்தரான பாண்டி கண்ணன், “ ‘தர்பார்’ படம் ரிலீஸான ஒரு வாரத்திலேயே எங்களுக்குப் பாதிப்பு வந்தது. அதை நாங்கள் லைகா நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தினோம். ‘வசூல் குறைந்தது எங்களுக்கே தெரிகிறது. இது சூப்பர் ஸ்டார் படம். இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க. எங்கள் சாரிடமும் (சுபாஷ்கரன்), ரஜினி சாரிடமும் பேசுகிறோம்’ என்றனர்.


சூப்பர் ஸ்டாரின் படத்தை, 10 நாட்களில் திரையரங்கில் இருந்து தூக்கினால், அவருடைய இமேஜ் பாதிக்கப்படும் என்று, 2 வாரங்களாகப் பொறுமையுடன் இருந்தோம். ‘இந்தப் படத்தால் எங்களுக்கு 70 கோடி ரூபாய் நஷ்டம். எனவே, எங்களால் எதுவும் செய்ய முடியாது. ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவருக்கும் நிறைய சம்பளம் கொடுத்திருக்கிறோம். அவர்களிடம் சென்று பேசுங்கள்’ என லைகா நிறுவனத்தினர் கை கழுவிவி ட்டனர்.


ரஜினி சாரைப் பார்க்கச் சென்றபோது அப்பாயின்மென்ட் தரவும் இல்லை, பார்க்கவும் இல்லை. இன்று காலையில் கூட ரஜினி சார் வீட்டுக்குச் சென்றோம். ஆனால், போலீஸ் எங்களை உள்ளே விடவில்லை. போயஸ் கார்டன் சாலையிலேயே நாங்கள் இருக்கக்கூடாது என்று கூறினார்கள்.


எனவே, ஒரு ஓரமாக நின்று ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கத் தயாரானபோது, ஒருவர் மட்டும் ரஜினி சார் வீட்டுக்குள் செல்லலாம் என்று கூறினர். அதன்படி, உள்ளே சென்றவரிடம், ‘ராகவேந்திரா மண்டபத்துக்குச் சென்று சுதாகரிடம் உங்கள் மனுவைக் கொடுங்கள்’ என்று கூறப்பட்டது.


 


அதன்படி, ராகவேந்திரா மண்டபம் சென்றால், ‘எனக்கு இந்த மனுவை வாங்க உரிமை இல்லை. நீங்கள் லைகா நிறுவனத்துக்குச் செல்லுங்கள்’ என்று சுதாகர் கூறினார். தமிழ்நாட்டு விநியோகஸ்தர்களுக்கு மட்டும் ‘தர்பார்’ படத்தால் 25 கோடி ரூபாய் நஷ்டம். இவ்வளவு நஷ்டப்பட்ட எங்களையே நீங்கள் பார்க்கவில்லை என்றால், மற்றவர்களை எப்படிப் பார்ப்பீர்கள்?


இதற்கு மேலும் ரஜினி சார் எங்களைச் சந்திக்கவில்லை என்றால், திரையரங்கு உரிமையாளர்களுடான எங்கள் வரவு - செலவுகளுடன், அவர்களையும் அழைத்துக்கொண்டு வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என்றார்.


.


 


ரஜினி சார் படம் என்பதால்தான் வாங்கினோமே தவிர, லைகா தயாரித்த படம் என்பதற்காக வாங்கவில்லை. மேலும், இந்தப் படம் எங்களுக்கு மினிமம் கியாரண்டி அடிப்படையில் கொடுக்கப்பட்டதே தவிர, டிஸ்ட்ரிபியூஷன் முறையில் தரப்படவில்லை.


முதலில் நாங்கள் லைகாவை அணுகியபோது, அவர்கள்தான் ரஜினி சாரை சந்திக்குமாறு கூறினர். ஆனால், எங்களால் அவரைச் சந்திக்க முடியவில்லை. அவரிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, சந்திக்க அப்பாயின்மென்ட் மட்டுமே” எனப் பதில் அளித்தார் பாண்டி கண்ணன்.


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,