கூடுதலாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்

[19:03, 25/02/2020] Amirthalingam: நேரடி கொள்முதல் நிலையங்களில் 
விவசாயிகளிடம் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றுக்கு ரூ40 அதிகாரிகள் கேட்பதாக 
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு. 


நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளின் தேக்கம் குறித்து திருத்துறைப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,


திருவாரூர் மாவட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது அதற்கான அறுவடை பணிகள் முடிந்து நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்த நேரடி கொள்முதல் நிலையத்தில்
கொள்முதல் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் விவசாயிகள் கொண்டு வரும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது, மேலும் அவைகள் வீணாகும் நிலை ஏற்படுகிறது.


எனவே நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் இயந்திரங்களை இரட்டித்து வேகமாக கொள்முதல் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும். நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டை எடுக்கும் முறையை மாற்றி கூடுதலாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.


குறிப்பாக விவசாயிகள் கொண்டு வரும்
நெல் மூட்டையை கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றுக்கு ரூ40 பணம் அதிகாரிகள் கேட்பதாக புகார் வருகிறது, அதனை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை