வாய் பிளக்க வைக்கும் சொகுசு வசதிகள்!
ட்ரம்ப் இந்தியப் பயணத்துக்காக வந்துள்ள பிரத்யேக கார்... வாய் பிளக்க வைக்கும் சொகுசு வசதிகள்!
காரின் எடைக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தக் காருக்கு 5.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
மைலேஜ் லிட்டருக்கு 3 கி.மீ எனக் கூறப்படுகிறது.
ட்ரம்ப் இந்தியப் பயணத்துக்காக வந்துள்ள பிரத்யேக கார்... வாய் பிளக்க வைக்கும் சொகுசு வசதிகள்!
இன்று பிப்ரவரி 24-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
ட்ரம்ப்-ன் 36 மணி நேர இந்தியப் பயணத்தில் அவர் பயன்படுத்த அமெரிக்காவிலிருந்து பிரத்யேகமாக ‘பீஸ்ட் 2.0’ என்ற கார் வந்துள்ளது.
அதிபரின் லிமோசின் ‘பீஸ்ட் 2.0’ கார் வகை உலகிலேயே ஒன்றே ஒன்றுதான் உள்ளது.
இந்த வடிவமைப்பு உடனான கார் ட்ரம்ப்-க்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது ஆகும்.
உலகிலேயே மிகவும் பாதுகாப்பும் சொகுசும் நிறைந்த கார் இதுதான் என்ற சாதனையையும் ‘பீஸ்ட் 2.0’ படைத்துள்ளது.
ட்ரம்ப்-பிடம் குண்டுகள் துளைக்க முடியாத ‘பீஸ்ட் 2.0’ கார்கள் இரண்டு உள்ளது.
அவசர கால உதவிக்காக ஒரே மாதிரியாக இரண்டு கார்களை வைத்துள்ளார் ட்ரம்ப்.
இந்தக் காரின் சிறப்பு என்னவென்றால் இந்தக் கார் உடன் பிரத்யேக விமானம் ஒன்றும் இணைப்பிலேயே இருக்கும்.
இந்தக் கார் எங்கெல்லாம் ட்ரம்ப் உடன் பயணமாகிறதோ அங்கெல்லாம் அந்த a C-17 விமானமும் பயணமாகும்.
இந்தக் காரின் சக்கரங்களில் காற்று முழுவதுமாக இறங்கினாலும் இந்த ‘பீஸ்ட் 2.0’ காரினால் இயங்க முடியும்.
இந்தக் காரின் கண்ணாடிகள் 5 இன்ச் தடிமன் உடையன.
மேலும், கதவுகளும் காரின் உடல் பாகங்களில் 8 இன்ச் தடிமனான உலோகங்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
டைட்டானியம், செராமிக்ஸ் மற்றும் குண்டு துளைக்காத ப்ளேட்கள் கொண்டு இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரம் அல்லது சற்றும் வெளிச்சம் இல்லாத பகுதிகளிலும் இந்தக் காரால் பயணிக்க முடியும்.
உட்புறத்தில் அவசர கால ஆக்சிஜன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக சாட்டிலைட் தொலைபேசி இணைப்பு மற்றும் அணு குறியீடுகள் வசதியும் உள்ளது.
தீ பிடித்தால் இந்தக் காரின் வெளிப்புறப் பகுதிகளிலிருந்து தானியங்கியாக தீயை அணைக்கும் வாயு வெளியேறும்.
காரின் எடைக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தக் காருக்கு 5.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
மைலேஜ் லிட்டருக்கு 3 கி.மீ எனக் கூறப்படுகிறது.
அமெரிக்கப் பாதுகாப்புப் படையினருக்கு மட்டுமே இந்தக் காரின் அத்தனை தகவல்களும் தெரியும்.
பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தாத இன்னும் பல வசதிகள் அந்தக் காரினுள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காரணம், இந்தக் காரின் வெளிப்புறத்தின் அல்லது உட்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களின் விவரங்கள் இதுவரையில் வெளியிடப்பட்டதில்லை.
ஓட்டுநரிடம் துப்பாக்கி இருக்கும் என்ற விவரம் மட்டுமே அதிகாரப்பூர்வமானது.
இதனுடன் ட்ரம்ப்-க்குத் தேவையான அத்தனை மருத்துவ வசதிகளும் அந்தக் காரினுள்ளேயே இருக்குமாம். அவரது ரத்த வகை கூட ஸ்டாக் வைக்கப்பட்டிருக்குமாம்.
ஆனால், இதையும் தாண்டி உள்ள பல வசதிகளும் ‘பீஸ்ட் 2.0’-வின் சிறப்பம்சங்களும் ட்ரம்ப்-க்கும், பாதுகாப்புப் படையின் பிரத்யேக குழுவுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரிந்ததாக இருக்கும்..
Comments