மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும்

சிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்துவதா?தமிழக முதல்வர் இறுக்கமான சூழலிலிருந்து வெளிவந்து மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. 
இதுகுறித்து எ.ஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


 அரசமைப்பு சட்ட விரோத சிஏஏ சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நேற்று பிப்.18சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தபோது அதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் அவர்கள், "சிஏஏ சட்டத்தால் தமிழக மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சுட்டிக் காட்டுங்கள். நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம். அதைவிடுத்து, மக்களை ஏமாற்றி நாடகமாடாதீர்கள்." என்று மிகவும் ஆக்ரோசமான முறையில் பதிலளித்துள்ளார். முதல்வரின் இத்தகைய அணுகுமுறை வேதனையளிக்கிறது.
இந்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என்று சட்டத்தை கொண்டுவந்த பிறகு அமித்ஷாவும், சங்க்பரிவார் அமைப்பினரும் இதைத்தான் பேசிவருகின்றனர்.
சிஏஏ சட்டத்தால் பாதிப்பு உண்டா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளாமலா போராட்டக்காரர்கள் கடந்த 2 மாத காலமாக போராடி வருகின்றார்கள். சட்டத்தை பற்றி தெரியாமலா அறிவுஜீவிகள் சட்டத்துக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றார்கள். சட்டம் குறித்து தெரியாமலா பல மாநிலங்கள் சட்டத்துக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.
சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவோம் அல்லது மாட்டோம் என்று கூறுவதை விடுத்து, தொடர்ந்து போராட்டக்காரர்களை முதல்வர் குற்றப்படுத்தி வருவது தவறானதாகும்.
சிஏஏ சட்டத்தால் நிச்சயம் பாதிப்பு இருக்கும். சிஏஏ சட்டத்துடன் என்பிஆர், என்ஆர்சி ஆகிய சட்ட நடவடிக்கைகள் இணையும் போது அது இந்த நாட்டின் அமைதியான சூழலை பாதிக்கும் என்று அறிவு ஜீவிகளும், பொதுமக்களும் தொடர்ந்து குரல் கொடுப்பதை நாடகம் என்று கொச்சைப்படுத்தாமல், இறுக்கமான சூழலிருந்து வெளிவந்து, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் மதிப்பளிக்க வேண்டும். கருப்புச் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்