திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் ஊராட்சியில் குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரைகளை அப்பகுதி பொதுமக்களேஅகற்றல்

திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் ஊராட்சியில் குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரைகளை அப்பகுதி பொதுமக்களே அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருத்துறைப்பூண்டி அருகே வாம்பியம் ஊராட்சியில் மடத்துக்குளம், யானை விழுந்தான்குளம், கொத்தரை குட்டைகுளம், விட்டுக்கட்டி பகுதியில் மாரியம்மன் குளம், சங்க குளம், பள்ளிகுளம், வீரபுரம் பகுதியில் பாப்பன்குளம், மடப்புரம் பகுதியில் முக்குளம், ஒரியன் குட்டை குளங்கள் உள்ளது அனைத்து குளங்களும் ஆகாய தாமரைகள், பாசிகள் மண்டிகிடப்பதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது



. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் தூர்வாரும் பணி மேற்கொள்வது என்று முடிவெடுத்து முதலில் மடப்புரம் பகுதியில் உள்ள 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக்குளத்தில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரைகள், பாசிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரம்பியம், மடப்புரம் வீரபுரம் பகுதிகளில் உள்ள மற்ற குளங்களை ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வார ஒன்றிய அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வரம்பியம் ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கியமேரி தெரிவித்தது: திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் வரம்பியம் பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது அனைத்து குளங்களும் ஆகாய தாமரைகள், பாசிகள் மண்டிக்கிடக்கிறது. இது குறித்து ஒன்றிய குழு கூட்டத்திலும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆகாய தாமரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து குளங்களையும் பொதுமக்களே தூர்வார முடியாது மற்றும் உள்ள அனைத்து குளங்களையும்  சுத்தம் செய்து தூர்வார மாவட்ட ஆட்சியரும் ஒன்றிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார். செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி