கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பஸ்தலப்பள்ளிமலைகளில் உரிய அனுமதி இன்றி கல்குவாரிகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ் மாநில கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

தமிழ் மாநில கட்சி கிருஷ்ணகிரி மாவட்டம்  :


      கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே
பஸ்தலப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 1500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த குடியிருப்பின் அருகில் புராதண சின்னங்கள் உள்ள மிகப் பெரிய அளவிலான மலைகள் உள்ளது,
இந்த மலைகளில் உரிய அனுமதி இன்றி கல்குவாரிகள் அமைத்துள்ளனர்.
இந்த கல்குவாரிகளில் இரவு நேரங்களில் வெடிக்கப்படும் 
வெடிகளால் அருகில் உள்ள வீடுகளில் உள்ள சுவர்கள் விரிசல் ஏற்படுவதோடு ஒடுகளும் உடைத்து விடுவதால்  இரவு நேரங்களில் வீட்டில் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,  இது மட்டுமின்றி கல்குவாரிகளில் இருந்து வெளியேறும் தூசிகளால் விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,




 இது குறித்து கல்குவாரி உரிமையாளரிம் முறையிட்டால் உரிய பதில் தராமல் அடியாட்களை வைத்து கிராம மக்களை அச்சுறுத்தி வருவதாக செல்லப்படுகிறது, 
இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கத்தால்,பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தமிழ் மாநில கட்சியின் மாவட்ட செயலாளர் பறக்கும் படை கி. சக்தி தலமையில் மாவட்ட ஆட்சியர் பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.தமிழ் மாநில கட்சியுடன் இணைந்து காளிங்காவரம் தொகுதி திருமதி : காஞ்சனா பழனிசாமி ஒன்றிய குழு தலைவர் (Councilor ) மற்றும் பஸ்தல பஞ்சாயத்து தலைவர் திருமதி: R. கவிதா ராஜப்பா மற்றும் தமிழ் மாநில கட்சியின் நகர செயலாளர் சி கோவிந்தராஜ் , நகர பொருலாளர் வெ ராமசந்திரன் மற்றும் தொழிலளாராணி செயலாளர் புருசோத்தமன் மற்றும் 40க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு மனுவினை கொடுத்தர்கள்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,