அருவி கவிதை


அருவி


கவிதை பக்கங்கள் 




வீழ்வதில் மகிழும்
அருவி போலும் நான்!


ஆர்ப்பரித்து வீழாமல்
அமைதியாகவே வீழ்கிறேன்!


ஆனாலும் மகிழ்வுடனே
இருக்கிறேன்!


வீழ வைத்தவர்களுக்கு
ஓர் நன்றி!


உங்களுக்கு ஓர்
அறிவிப்பு!


வீழ்த்துவதில் மட்டுமே
கவனம் வைக்காமல்


கொஞ்சம் விழிப்புடனும்
இருந்து விடுங்கள்!


மறுபடியும் உயரம்
தொட உத்தேசித்திருக்கிறேன்!


அமைதியாய் வீழ்ந்தது போல்
அமைதியாகவே ஏறுகிறேன்!


வீழ்ந்து கிடக்க விருப்பம்
இன்றி சம தளத்தில்


மகிழ்வாய் ஓடி, அமைதியாய்
ஏறுகிறேன்!


நீங்கள் மகிழ்வாயே
இருந்திடுங்கள்!


உங்களிடம் சொல்ல
விரும்புவது எல்லாம்


வீழ்வதெல்லாம் மீண்டு
எழுந்து உச்சம் தொடவே!


மஞ்சுளா யுகேஷ் 



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி