ஏப்ரல் 2 முதல் உணவு பொருட்கள் . கூட்டுறவு பதிவாளர்

ஏப் 2 ம் தேதி முதல் ரேஷன் கார்டுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.


இது குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் அனைத்து கூடுதல் பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்.


ஏப் 2 ம் தேதி முதல்


தமிழக முதலமைச்சரால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்,ரூ 1000 ரொக்கமும்,ஏப்ரல் மாதத்திற்கான,அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவை விலையின்றி வழங்கப்படும் என்று அறிவித்தார்.ஊரங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் இத்தருணத்தில் 2.4.2020 முதல் தொடங்கி 15.04.2020 க்குள் இவ்விநியோகம் முடிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.


அனைத்து பணியாளர்களுக்கு பயணப்படி


எனவே மேற்படி ரூ 1000,ரொக்கம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான,அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை விலையின்றி பணியை மேற்கொள்ளும் கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைப் பணியாளர்கள் அனைவருக்கும்,மேற்கண்ட காலத்திற்கு நாளொன்றிறகு ரூ 200 ஐ பயணம்,மற்றும் இடைநிகழ்ச் செலவினமாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் அனுமதிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


முகக்கவசம்,கிருமிநாசினி


அனைத்து நியாயவிலைக்கடைப்பணியாளர்களுக்கும் தேவையான முகக் கவசங்கள்,மற்றும் நியாயவிலைக்கடைகளுக்கும் தேவையான கிருமிநாசினிகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சங்கங்கள் கொள்முதல் செய்து வழங்கவேண்டும் என்றும்,இதனை கூடுதல் பதிவாளர்,சென்னை மண்டலம் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள்,இணைப்பதிவாளர் ,சென்னை மற்றும் அனைத்து கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர் கண்காணிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,