கொரோனா வைரஸ்கள் குளிர்காலத்தில் மிக விரைவாக பரவுகிறது

சீனாவின் வுகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் 76 நாடுகளில் தற்போது பரவியுள்ளது. இந்த நோய்க்கு தற்போது 90,443 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில் 3,119 பேர் உயிரிழந்து உள்ளனர்.

 

இத்தாலி மற்றும் ஈரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்றின் பரவல் சீனாவில் கட்டுப்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது. ஆனால் விஞ்ஞானிகள் தற்போது, கொரோனா வைரஸ் ஒருபோதும் முற்றிலுமாக வெளியேறாது என்றும் அது சளி, மார்பு நோய்த்தொற்று மற்றும் காய்ச்சல் போன்ற வற்றாத நோயாக மாறக்கூடும் என்றும் கூறி உள்ளனர்.


 


 

கொரோனா வைரஸ்கள் குளிர்காலத்தில் மிக விரைவாக பரவுவதாக அறியப்படுகின்றன, ஏனெனில் அவை நீண்ட காலம் உயிர்வாழ முடிகிறது, மேலும் குளிர்ந்த, வறண்ட வானிலையில் மிகவும் திறம்பட இனப்பெருக்கம் செய்ய முடியும்.  இது மக்களை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

 

வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்கள் வெவ்வேறு காலங்களில் குளிர்காலம் இருப்பதால், இது  ஆண்டு முழுவதும் பரவக்கூடும்.

 

இவை ஒவ்வொரு குளிர்காலத்திலும் சுற்றும், குணப்படுத்த முடியாது வைரஸ் நோய்கள். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று சதவீதத்தினரை கொன்ற கொரோனா, அதே அடிச்சுவடுகளைப் பின்பற்றி இயல்பாக்கப்பட்ட நோயாக மாறக்கூடும்.கொரோனா வைரஸ் குடும்பத்தின் மற்ற வகைகளை பார்த்தால், அவை சுவாச வைரஸ்கள் போன்றவை.

 

லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஆக்ஸ்ஃபோர்ட் கூறி உள்ளதாவது:-

 

கடந்த 50 ஆண்டுகளாக அல்லது அதற்கு மேலாக நாங்கள் அவைகளை பற்றி அறிந்திருக்கிறோம், அவை பருவகால நோய். அவைகள் ஜலதோஷம் போலவே இருக்கிறது, இங்கிலாந்தில் இந்த நேரத்தில் சில ஆயிரம் பேர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோவிட் -19 அந்த முறைக்கு பொருந்துமா இல்லையா, என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும், ஆனால் என் யூகம் அதுதான். என தெரிவித்துள்ளார்.

 

பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நோய் நிபுணர் டாக்டர் அமேஷ் அடல்ஜா கூறும் போது , 'இது சில காலம் நம்முடன்  இருக்கும். இது மக்களிடையே காணக்கூடியதாக இருக்கும்  மற்றும் தடுப்பூசி இல்லாமல் போகப் போவதில்லை என கூறினார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்