திருப்பதி லட்டுக்கு வயது 300

திருப்பதி லட்டுக்கு வயது 300


           திருமலை: திருப்பதி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது லட்டு பிரசாதம்தான். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்லவர் காலத்தில் இருந்து பிரசாதங்கள் சுவாமிக்கு சமர்ப்பிக்கப் பட்டது.  அதன்பின்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் பிரசாதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதை தயாரிக்க அப்போதைய அமைச்சர் சேகர மல்லண்ணா, கோயிலில் பலவிதமான தானங்களை செய்துவந்தார்.


அந்த நாட்களில் திருமலை கோயில் அடர்ந்த காடுகளுக்கிடையே இருந்தது.  கோயிலுக்கு வருபவர்கள் மலை அடிவாரத்திலிருந்து பல நாட்கள் நடந்துதான் மேலே  வரவேண்டும். கீழேயோ, இடையிலோ, மலை மேலோ உணவு கிடைப்பது அரிதாக இருந்தது. எனவே சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சுவாமிக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்திய பிரசாதங்களே வழங்கப்பட்டு வந்தன. இது திருப்பொங்கம் என அழைக்கப்பட்டு வந்தது. இதில் அப்பம், சுழியம், அதிரசம், வடை ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து கி.பி.1715 ஆகஸ்டு 2 முதல் பூந்தி அறிமுகம் செய்யப்பட்டது. 1940 முதல் இது லட்டாக மாற்றப்பட்டது.


லட்டு 3 ரகமாக தயாரிக்கப்பட்டது. 750 கிராம் எடையில் ஆஸ்தான லட்டு தயாரிக்கப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் வரும்போது, அதிக நெய் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது.


2வது ரகம் 350 கிராம் எடையில் கல்யாண உற்சவ லட்டு.
இது ஆர்ஜித சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


3வது ரகம் ப்ரோத்தம் -  175 கிராம் எடையில் தயாரிக்கப்பட்டு ரூ.25க்கு பக்தர்களுக்கு விற்கப்பட்டது. ஆரம்பத்தில் இது 80 காசுக்கு விற்கப்பட்டது. இலவச, திவ்ய தரிசன பக்தர்களுக்கு சலுகையில் ஒரு லட்டு ரூ.10 வீதம் 2 லட்டு வழங்கப்பட்டது.


1970 களில் ஒரு ரூபாய்க்கு ஒவ்வொரு கரண்டி சர்க்கரைப் பொங்கள், வெண் பொங்கல், புளிசாதம், தயிர்சாதம் என கோவிலுக்கு உள்ளேயே உரிமைதார பட்டாச்சார்யர்களால் விற்கப்பட்டது.  அந்த ரூ.1 பிரசாதம், பகல் உணவுக்குப் போதுமானதாக இருந்தது.  தற்போது, பக்தர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.  


தற்போது ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படுகின்றன. லட்டு பிரசாதத்துக்கு முன்னாள் தலைமை செயல் அலுவலர் கே.வி.ரமணாச்சாரி எடுத்த முயற்சியால் 18.09.2009 முதல் திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இவ்வளவு சிறப்புமிக்க பிரசாதம் 1715ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 300 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.


 


1940ம் ஆண்டு பூந்தியாக வழங்கப்பட்ட  பிரசாதம்  லட்டாக  மாற்றப்பட்டு  வழங்கப்பட்டது.   லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு 80  ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் ஓராண்டுக்கு ரூ.300 கோடி செலவில் 10  கோடி லட்டு செய்யப்படுகிறது.


1950ம் ஆண்டு லட்டு தயாரிப்பதற்கான கொள்முதல் பொருட்கள் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற திட்டம் வழிமுறையாகக் கொண்டு வரப்பட்டது.


      அப்போது, தேவஸ்தானம் அதை மாற்றி கொண்டு வந்தது. அதன் பிறகு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தது.  2009ம் ஆண்டு மீண்டும் அதன் அளவு மாற்றப்பட்டு  அதை  படிகார திட்டம் என்று  அழைத்து 5,100 லட்டுகள் தயார் செய்வதற்காக 108 கிலோ நெய், 200 கிலோ கடலை பருப்பு, 400 கிலோ சர்க்கரை, 35 கிலோ முந்திரி, 17 கிலோ திராட்சை, 10 கிலோ கற்கண்டு, 5 கிலோ ஏலக்காய் என 8,101 கிலோ மூலப்பொருட்கள் கொண்டு 5,100 லட்டு தயார் செய்யப்பட்டது.      


      லட்டு தயார் செய்வதற்கான பூந்தி கோயிலுக்கு வெளியே தயார் செய்யப்பட்டு கன்டெய்னர் மூலம் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு லட்டாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. அதனால் தான்  பக்தர்களுக்கு       தினந்தோறும்  சுமார் 4 லட்சம் லட்டு தயார்   செய்யப்பட்டு  வழங்கப்படுகிறது.


      1940ம் ஆண்டு பிரோத்தம் என்று அழைக்கப்பட்ட லட்டு 170 கிராம் அளவிற்குத் தயார் செய்யப்பட்டு 1 லட்டு விலை 50 பைசாவாக இருந்து ரூ.1 முதல் 10 வரை படிப்படியாக  விலை உயர்த்தி விற்கப்பட்டு 2007ம் ஆண்டு முதல் 2020  வரை ரூ.25க்கு வரை விற்கப்பட்டு வந்தது. தேவஸ்தானம் ஒரு லட்டு தயாரிக்க 38 ரூபாய் செலவு செய்கிறது.  தற்போது வைகுண்ட ஏகாதசி முதல்  ஒரு பக்தருக்கு 1 லட்டு இலவசம், எஞ்சிய லட்டுகள் ஒன்று ரூ50 என்ற விலையில் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஒரு லட்டு ரூ.200 என்ற விலையில் பெரிய லட்டு விற்கப்படுகிறது.


செஏ துரைபாண்டியன்     


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை