இசைப்பேரரசி டி. கே. பட்டம்மாள்  

       பாபநாசம்  சிவன்   1939 – ல்  நடித்த  "தியாக பூமி"  படத்தில்  எழுத்தாளர் கல்கி எழுதி,  பாபநாசம் சிவன் & ராஜகோபால அய்யர்  இசையமைத்து,    "தேச சேவை செய்ய வாரீர்"  என்று  தொடங்கும் பாடல்தான்  அந்த இசைக் குயில் பாடிய முதல் திரையிசைப் பாடல்.  12 வாரங்களாக அரங்கம் நிறைந்து ஒடி கொண்டிருந்த அந்த "தியாக பூமி" படம் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது.  இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகே தடை விலக்கப்பட்டது.    


      "தேச சேவை செய்ய வாரீர்" என்ற அந்தப் பாடலைப் பாடியவர்  யார் தெரியுமா?   பாடகி   நித்யஸ்ரீ   மகாதேவன்,    அவர்களது பாட்டியான டி. கே. பட்டம்மாள்  என்று   பரவலாக   அறியப்படும்   தாமல்   கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்ற புகழ்பெற்ற கருநாடக இசைப்  பாடகிதான்.     காஞ்சிபுரத்தைச்   சேர்ந்தவர்.


      இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத் திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும்  எம். எல். வசந்தகுமாரியும்.


      அலமேலு என்ற இயற்பெயருடைய “பட்டா” எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள் தமிழ்நாடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தாமல் என்ற ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர். தாயார் காந்திமதி (ராஜம்மாள்) ஒரு சிறந்த பாடகி.    


      அக்காலக் குடும்ப மரபுக்கேற்ப ராஜம்மாள் என்றும் பொது மேடைகளிலோ அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களின் முன்னிலையிலோ பாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் அந்த மரபுகளையும் தாண்டி பட்டம்மாள் தனது 4 ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார். அவருடன் உடன்பிறந்த மூன்று சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன்,  டி. கே. ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள். பட்டம்மாள்  1939 ஆம் ஆண்டில் ஆர். ஈசுவரன் என்பவரைத்  திருமணம்  செய்துகொண்டார்.


இசைத் துறையில்


பட்டம்மாள் முறையாக  கருநாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்ட எல்லாரும் பின்பற்ற வேண்டிய பெண்மணி ஆவார். சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார்.   தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்[5].


 


பட்டம்மாள் (வலது) தனது சகோதரர் டி. கே. ஜெயராமனுடன், 1940களில்


 


1929 ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற் தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகுதான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. மூன்று ஆண்டுகளுக்குப்  பின்,  1932  இல்  எழும்பூர்  மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார்.   பின்னர்  காங்கிரஸ் கட்சிக்  கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது  மேடைக்  கச்சேரிகளிலும்  திரைப்படங்களிலும் பாடி வந்தார். 


பாபநாசம் சிவன்கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர்  பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பைப்  பறைசாற்றினார்.


      பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள்  ஜப்பான்சிங்கப்பூர்பிரான்சுஜெர்மனிஅமெரிக்கா


கனடா முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய 'அகிகோ'வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.


அவர் வாங்கிய விருதுகள்


சங்கீத நாடக அகாடெமி விருது, 1962
1-1-1939  முதல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக கல்கி அவர்கள் எழுதிய "தியாக பூமி" கதை,  திரைப்படமாக கே சுப்ரமணியம் அவர்களின் இயக்கத்தில் 20-5-1939- ல்  சென்னை கெயிட்டி தியேட்டரில் திரைக்கு வந்தது.   தற்போதைய  கேசினோ  தியேட்டர் அருகில்தான் கெயிட்டி தியேட்டர் இருந்தது என்பது குறிப்படத்தக்கது. இப்போது


சென்னை  என்றழைக்கப்படும் அப்போதைய மெட்ராசில் கட்டப்பட்ட முதல் திரையரங்கம் கெயிட்டி என்றழைக்கப்பட்ட திரையரங்கம் ஆகும். 


 


"தியாக பூமி"  கதை வருமாறு. 
      தஞ்சை மாவட்டம்  நெடுங்கரை  கிராமத்தில் வாழ்ந்த சாம்பு சாஸ்திரிகள் (பாபநாசம் சிவன்)  தனது  ஒரே  மகள் சாவித்ரியை (எஸ் டி சுப்புலக்ஷ்மி)  ஸ்ரீதரன் என்ற வங்கியில் வேலை செய்யும் வாலிபனுக்கு


(கே ஜே மகாதேவன் பி ஏ)  திருமணம்  செய்து  கொடுக்கிறார். மனைவி சுத்த  கர்நாடகமாக  இருப்பது,  மேல்நாட்டு  மோகம்  கொண்ட ஸ்ரீதரனுக்கு  பிடிக்கவில்லை.

சுசி  (ஜெயலக்ஷ்மி) என்ற  நாகரீகப் பெண்ணை காதலிக்கிறான்.
விளைவு...கைக்குழந்தையுடன் விரட்டப்படுகிறாள் சாவித்திரி...தந்தையிடம் குழந்தையை சேர்த்துவிட்டு சென்னை செல்கிறாள்...
தொடரும் ஆறு வருடங்களில் உமாராணி என்ற பெயர் மாறி பெரும் பணக்காரி ஆகிறாள்...
உமாராணி தனது மனைவி என அறிந்துகொள்ளும் ஸ்ரீதரன் சேர்ந்து வாழ அழைக்கிறான்..
மனைவி மறுத்ததால் தாம்பத்திய உரிமை கேட்டு நீதிமன்றம் செல்கிறான்...
கோர்ட்  இருவரையும்  இணைந்து  வாழ  வலியுறுத்துகிறது...
பல  பெண்களின்  தியாகத்தால்  விளைந்த பூமி  இது  என  சொல்லி  மகள் சாவித்திரியை  திருந்திய கணவனிடம் சேர்ந்து வாழுமாறு சொல்கிறார் சாம்பு சாஸ்திரிகள்...

சுதந்திரப் போராட்டத்தில்  கலந்து  கொண்டு  சிறை செல்லும் உமாராணி அங்கே அதே காரணத்திற்காக சிறையிலிருக்கும் கணவனை பார்க்கிறாள்...  இருவரும் மனம் இணைய ... சுபம்...


            படத்தில் இடம்பெற்ற தேச சேவை செய்ய வாரீர் என்ற பாடல்,   இறுதிக்காட்சியில்  இடம்  பெற்ற  சுதந்திரப்போராட்ட பேரணிகள் மற்றும் படம் பார்த்த ரசிகர்களிடம் விளைந்த எழுச்சி ஆங்கில அரசை பயமுறுத்தியதால் 12 வாரங்களாக அரங்கம் நிறைந்து ஒடி கொண்டிருந்த தியாக பூமி படம் தடை செய்யப்பட்டது...
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகே தடை விலக்கப்பட்டது


 


  செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை