கொரோனா சுனாமியில்  காணமால் போன புள்ளி

கொரோனா சுனாமியில்  காணமால் போன ரஜனியின் புள்ளி


          தனிக்கட்சி தொடங்கி, தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அறிவிபிறகு, அவ்வப்போது அரசியல் வெடிகளைக் கொளுத்திப் போட்டுவந்தவர், தனிக்கட்சி தொடங்கும் தன் ஐடியாவை அமலுக்குக் கொண்டு வராதவர் கடந்த 5-ம் தேதி தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை அவசரமாக அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி. `முதல்வர் பதவிக்கு நான் போட்டியிடாமல், வேறொருவரை முன்னிறுத்தினால் உங்கள் ரியாக்‌ஷன் என்ன, கட்சி, ஆட்சி இரண்டையும் இரண்டு தலைமையின் கீழ் நடத்தினால் எப்படி இருக்கும்?' என ரஜினி கேள்வி எழுப்பினார்


நீங்க போட்டியிடலைன்னா கட்சியே தேவையில்லை தலைவரே. ஆட்சியும் கட்சியும் ஒருத்தர்கிட்ட இருந்தா மட்டும்தான் கட்டுப்பாட்டோட இருக்க முடியும்' எனச் சிலர் குரலை உயர்த்த ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை  செயலாளர்கள் தன்னுடைய குரலுக்கு மறுபேச்சு பேச மாட்டார்கள் என நினைத்திருந்தவருக்கு இக்கருத்து அதிர்ச்சியளித்து. தன்னுடைய ஏமாற்றத்தைப் பத்திரிகையாளர்களிடமும் பகிர  ரஜினி அரசியலுக்கே முழுக்குப் போட்டுவிட்டதாக தெரிய பயந்து போன அவர் . தன்னுடைய நிலைப்பாட்டை விளக்குவதற்காக, கடந்த 12-ம் தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தைக் கூட்டி. ஆட்சியும் கட்சியும் வெவ்வேறாக இருக்கும். 50 வயதுக்குக் கீழானவர்களை மட்டுமே வேட்பாளராக முன்னிறுத்துவேன். குறைவான கட்சி நிர்வாகிகளை மட்டுமே வைத்துக்கொள்வேன். முதல்வர் வேட்பாளராக என்னை நினைத்துக்கூட பார்க்க முடியாது. சட்டசபையில் உட்காரும் எண்ணம் எனக்கில்லை. மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் அரசியலுக்கு வருவேன்" என ரஜினி பேசினார்


 `எழுச்சி எப்போது ஏற்படுவது, இவர் எப்போது அரசியலுக்கு வருவது' என மன்ற நிர்வாகிகள் முணுமுணுத்து அவருடைய  ரசிகர்களிடமும் சோர்வு ஏற்படத் தொடங்கியது..


 இதனையறிந்த அவர் கடந்த 50 வருடத்தில் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும், ஊழலை அடிமட்டம் வரையில் ஒரு கட்டமைப்பாக வளர்த்துவிட்டன. இதை உடைக்காமல், நம்மால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. இப்போதிருக்கும் வாக்காளர்களில் 65 சதவிகிதம் பேர் இளைஞர்கள். 40 வயதுக்குக் கீழானவர்கள். இவர்களிடம் ஆட்சி மாற்றத்தை மட்டும் ஒரு கருத்தியலாக முன்வைத்தால் அது எடுபடாது. கட்சி தொடங்கும் எல்லோரும் பேசுவதைப் போலத்தான், நானும் பேசுவதாக எண்ணி ஒதுக்கிவிடுவார்கள். நான் எதிர்பார்த்த ஒரு எழுச்சி ஏற்படாது.


இந்த அரசியல் கட்டமைப்பே தவறு என்பதை மக்களுக்கு  புரிய வைக்க வேண்டும். ஒரு வட்ட, பகுதி செயலாளரிடம் இருந்துதான் ஊழல் தொடங்குகிறது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அரசு நிர்வாகத்துக்குள் அரசியல் கட்சியினர் நுழைந்து நாட்டாமை செய்வதால்தான் ஊழல் புரையோடிப் போயுள்ளது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். உங்கள் தொகுதி, பகுதிகளில் நடைபெற்ற ஊழல்களைத் தோண்டியெடுங்கள். அதை மக்களிடம் `எக்ஸ்போஸ்' செய்யுங்கள். இதுதான் எழுச்சியை ஏற்படுத்தும். தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் மீது மக்களிடம் அதிருப்தியை உருவாக்கும்" என்று  கூறியுள்ளார்


. தன்னுடைய அரசியல் மாற்றக் கருத்தை, அடுத்த 30 நாள்களுக்குள் மக்களிடம் `ரீச்' செய்யுமாறு மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி அறிவுறுத்தியுள்ளார். ``உங்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருந்தால், எல்லாம் சுலபமாக  இருந்திருக்குமே. இவ்வளவு மெனக்கெடத் தேவையில்லையே?" எனத் தென்மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் கேட்டதற்கு, ``என்ன சொல்லியிருப்பாங்க, நான் வந்தேறி, ஸ்கூல் வாடகைகூட கட்டாதவன், தமிழனைத் தமிழன்தான் ஆளணும். இப்படியெல்லாம் விமர்சனம் பண்ணியிருப்பாங்க. இப்ப தி.மு.க, அ.தி.மு.க தலைமைக்கு எதிராக என்னை முன்நிறுத்தல, என்னோட கருத்தைத்தான் நிறுத்தியிருக்கேன். என்னோட கருத்தை எதிர்த்து அவங்களால வாதம் பண்ண முடியுமா? இந்த அரசியல் கட்டமைப்பே தவறுன்னு சொல்றேன். தவறு இல்லைன்னு அவங்களால சொல்ல முடியுமா? இதுதான் வியூகம். மக்கள்கிட்டேயும் அதிர்வு தெரிய ஆரம்பிச்சிருச்சு. உற்சாகமா வேலையைப் பாருங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்று சொன்னாராம்


 இவ்வளவும் இப்போது எந்த மக்கள் மனதில் பதியல


மற்றும் இளைஞர்களை கவரல எனதான் சொல்ல வேண்டும் அவரது ரசிகர்களை தவிர வேறு யாரும் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை எனதான் தெரிகிறது


 நான் புள்ளி போட்டேன் அது சீக்கிரம் சுனாமியாக மாறும் என எந்த நேரத்தில் சொன்னாரே கொரான எனும் பெரிய சுனாமி உலகையே முற்றுகையிட இந்தியாவிலும் அது தீவிரமாக மத்திய அரசும் மாநில அரசும் பல நடவடிககைகளை மேற்கொண்டு வர மக்கள் முன் அந்த ஆபத்தை எதிர் கொள்ளும் பிரச்சனை மற்றும் அவர்களின் வாழ்வாதாரமே சந்தேகத்தில் இருக்க ரஜனி போட்ட புள்ளி சுத்தமாக இந்த கொரானா சுனாமி முன் காணாமல் போய்விட்டது என அரசியல் வல்லுனர் கருத்து தெரிவித்து வருகின்றனர் அவரின் 30 நாட்கள் கணக்கில் இங்கே கொரானாவை எதிர் கொள்ளும் மக்கள் மனதில் பதியவில்லை எனதான் சொல்லவேண்டும் மார்ச்சு 31வரை மக்களை நெருங்க இயலாத நிலை மற்றும் மக்கள் தற்போது ஆளும் அரசின் தயவில்தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு பிரச்சினையயென்றால் அவரது ரசிகர்களால் முடியாது என மக்களுக்கு தெரியும்


உலகமெங்கும் ரசிகர்களை கொண்ட அவர் இந்த கொரனான தாக்குதல் பற்றி மக்களிடையே பகிர்ந்து கொள்ளவில்லை மற்றும் எந்த ஆறுதலும் சொல்லவில்லை எனவும் மக்கள் மனதில் வருத்தம் நிழலாடி வருகிறது எனவும் சொல்லலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,