கூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறிய வேண்டிய 5 விஷயங்கள்

கூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்



இன்று நாம் பயன்படுத்தும் பல அதி நவீன தொழில்நுட்பங்கள் நம்முடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் மிகவும் எளிதானதாக மாற்றி உள்ளது. அதில்.குறிப்பாக நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியன, காலத்திற்கு தகுந்தார் போல் நாம் குரல் எழுப்பினாலே இயங்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளன.


           நாம் ஸ்மார்ட் போனில் உபயோகிக்கூடிய கூகுள் அசிஸ்டெண்ட் போனில் ஏதாவது தேட வேண்டும் என்றாலோ அல்லது ஒருவருக்கு கால் செய்து பேச வேண்டும் என்றாலோ நம்முடைய ஸ்மார்ட் போனில் ஒகே கூகுள் என்று சொல்லி ஆரம்பித்து கட்டளையிட்டால்  போதும் அடுத்த சில நொடிகளில் அது நாம் சொன்ன கட்டளையை ஏற்று அதை செயல்படுத்துகிறது.


இப்படி உதவிகரமாக இருக்கும் கூகுள் அசிஸ்டெண்ட்டில் உள்ள  5 சுவாரஸ்யமான அம்சங்களை பார்க்கலாமா.


1, நீங்கள் ஒரு இடத்தை, குறிப்பிட்ட நேரத்திற்குள் அடைய விரும்பினால், அதற்கான வழியை கூகுளிடம் கேட்டால் போதும், நீங்கள் செல்லக்கூடிய நேரத்தில் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மற்றும் நீங்கள் அந்த இடத்தை சென்றடைய ஆகும் நேரம், மேலும் அந்த இடத்தை எவ்வாறு அடையலாம் என்பது வரை உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் அது அளிக்கும்.


உதாரணமாக நீங்கள் மும்பை செல்ல விரும்பினால், ”கூகுள்” மும்பை க்கு எப்படி செல்ல வேண்டும் என கேட்டால், அது பற்றிய முழு தகவல்களையும் அளிக்கும்.


2 ,நாம் பொதுவாக ஏதாவது வெளி மாநிலங்களுக்கு அல்லது வெளி நாடுகளுக்கு சென்றால் அங்கு பேசப்படும் மொழி தெரியாமல், அனுபவிக்கும் சிக்கல்கள் ஏராளம், அதேபோல வேறு மொழியில் இருக்கும் வார்த்தையை அரிய, டிக்‌ஷனரியில் இருக்கும் பக்கங்களை புரட்டுவதற்குள் அந்த வார்த்தையே மறந்து போய்விடும்


இந்த இன்னல்களை போக்க கூகுள் அசிஸ்டெண்ட்டிடம் வணக்கம் என்பது பிரெஞ்சு மொழியில் என்ன என்று கேட்டால் போதும் அதற்கான பதிலையும், அந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது வரை நமக்கு சொல்லும் இந்த கூகுள் நண்பன்.


3 .வேலைக்கு சென்று அங்குள்ள எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து, அதற்கு நடுவில் மனைவி, பிள்ளைகள் கூறும் பொருட்களையும் வாங்கி வீட்டிற்கு செல்லும் ஒரு சராசரி ஆண், ஒருவேளை அந்த பொருளை மறந்து வீட்டிற்கு சென்றால் அதை விட அதிக பிரச்சனைகள் அங்கு காத்திருக்கும்.


இப்படி மறதி காரணமாக பல சிக்கல்களை சந்திக்கும் எல்லா நபர்களுக்கும் உதவும் வகையில் நாம் வாங்க வேண்டிய பொருட்களை அல்லது செய்ய வேண்டிய வேலைகளை நமக்கு நினைவூட்ட கூகுள் அசிஸ்டெண்டிடம் கூறினால் அது சரியாக அதே நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்டும்மேலும் நாம் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் GOOGLE HOME அல்லது GOOGLE KEEP ஆகியவற்றில் பதிவாகி நமக்கு அது நியாபகப்படுத்தும்.


4 .மிகவும் சிக்கலான மற்றும், நீண்ட கணக்குகள் நமக்கு எப்போதும் ஒரு சிறிய சலிப்பை உண்டாக்கும், அந்த கணக்குகளை சரிபார்க்க நாம் ஒரு பேப்பர் எடுத்து அதில் கணக்குகளை போட்டு சரிபார்ப்போம் அல்லது கால்குலேட்டரில் கணக்கு போட்டு பார்ப்போம் இனி எந்த சலிப்பும் இல்லாமல் கூகுள் அசிஸ்டெண்டிடம் உதவி கேட்கலாம். உதாரணமாக 30 ஆயிரம் மைல்களுக்கு எத்தனை கிலோ மீட்டர் என கேட்டால் அதற்கான சரியான பதில் நமக்கு கூகுளிடம் இருந்து கிடைக்கும், அல்லது 10000 டாலர்களின் இந்திய மதிப்பு கேட்டால் அதன் மதிப்பை ஸ்பீக்கர் வாயிலாக நமக்கு சரியான பதிலை அளிக்கும்.


5 .நீங்கள் செய்திகள் அதிகமாக வாசிக்கும் அல்லது உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவராக இருந்தால் அதற்கு கூகுள் அசிஸ்டெண்ட் ஒரு சிறந்த நண்பனாக இருக்கும், உங்களுக்கு தேவையான செய்திகளை, அல்லது நிகழ்வுகளை கூகுளிடம் சொன்னால் உடனடியாக உலகத்தின் எல்லா மூலைகளில் இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உங்களுக்கு அளிக்கும்.மேலும் உலகில் ஏற்படும் எல்லா முக்கிய நிகழ்வுகளையும் நாம் கேட்காமலேயே நமக்கு அளிக்கும்.


நம்முடைய பல பிரச்சனைகளுக்கு உதவும் இந்த கூகுள் அசிஸ்டெண்ட். உண்மையிலேயே சிறந்த ”அசிஸ்டெண்ட் தான்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,