சிறப்பு செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உள்ள நிலையில் 45 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 14ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய அரசு.


லண்டனில் இருந்து சென்னை வந்த 24 வயது இளைஞர், 65 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது : கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இருவரின் உடல்நிலை சீராக உள்ளது - சுகாதாரத்துறை.


கேரளாவில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 126ஆக உயர்வு  - கேரள முதல்வர் பினராயி விஜயன்.


துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது - அமைச்சர் விஜயபாஸ்கர்.


உணவகங்கள் , மளிகை கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதி நேர வரம்பு எதுவும் குறைக்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம்.


அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைப்பு - அரசு.


உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும் - மத்திய அரசு. 


ஏப்.2 முதல் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்.
ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும் - கூட்டுறவுத்துறை அறிவிப்பு.


ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 பயணச்செலவுக்காக வழங்க வேண்டும்.
ஊழியர்களுக்கு தேவையான மாஸ்க், கிருமிநாசினிகளை வழங்க வேண்டும் - கூட்டுறவுத்துறை.


உலகெங்கிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,025-ஐ எட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை அந்நாட்டு அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒதுக்கி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு : மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.


நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் தங்களது பெரும்பாலான கிளைகளின் சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதிமுக எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியும், அதிமுக எம்எல்ஏக்கள் நிதியிலிருந்து ரூ.25 லட்சமும் வழங்கப்படும் - அஇஅதிமுக அறிவிப்பு.


கொரோனா தடுப்பு நடவடிக்கை : தனிமைப்படுத்த இடங்கள் அதிகம் தேவை என்பதால் பயன்படுத்தாத வீடுகள், விடுதிகள்  இருந்தால் மாநகராட்சிக்கு தற்காலிகமாக கொடுத்து உதவலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர்.


தமிழகம் முழுவதும் கிருமிநாசினி  தெளிக்கும் பணியில் 7,500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு
தெரிவித்தார்


கொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி20 நாடுகள் முடிவு


தமிழ்நாட்டில் 4-வது தனியார் கொரோனா சோதனை ஆய்வகமாக ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி நிறுவனம் செயல்பட ஒப்புதல்: அமைச்சர் விஜயபாஸ்கர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை