கொரோனா தொற்று' க்கு 70 வகை மருந்து

'கொரோனா தொற்று' க்கு 70 வகை மருந்து


இந்திய ஆராய்ச்சியினர் தகவல்


 


புதுடில்லி :

            கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளபோது மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, ஒரு சில நாடுகள் கூறி வந்தாலும், எதுவும் உறுதி செய்யப்படவில்லை.  இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பது குறித்த ஆராய்ச்சியில், அத்வைத் சுப்ரமணியன், ஸ்ரீவத்ஸ் வெங்கட் ரமணன், ஜோதி பாத்ரா என்ற இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


            மனித உடம்பில் உள்ள, 332 புரதங்களை, கொரோனா வைரஸ் புரதங்கள், நேரடியாக தாக்குவது தெரிய வந்தது. இதையடுத்து, நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றுக்கு வழங்கப்படும், 70 வகையான மருந்துகள், கொரோனா சிகிச்சைக்கு சிறந்த பலனை தரும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 'தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதை விட, இந்த மருந்துகளை பயன்படுத்தி, பாதிக்கப் பட்டவர்களை குணப்படுத்தும் பணியில் ஈடுபடுவதே, இப்போதைக்கு சிறந்த வழி' என, அவர்கள் தெரிவித்தனர்.


தகவல் செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,