கத்தரிக்கோல் பிறந்த கதை

இன்றைய தகவல் களஞ்சியத்தில்


கத்தரிக்கோல் பிறந்த கதை


 


எகிப்து நாட்டில்  கி.பி. 1500  இல்  கத்தரிக்கோல் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.     இங்கிலாந்தில் ஆரம்ப காலத்தில் கத்தரிக்கோல் உயர்ந்த, அபூர்வ  பொருளாகக்  கருதப்பட்டது.   விலை உயர்ந்து காணப்பட்ட கத்தரிக்கோல் சாமானிய  மக்கள்  பயன்படுத்துதற்கு  வாய்ப்பில்லாமல்  இருந்தது.  1761 இல் இந்தப்  போக்கு  மாறி,  பலரும்  கத்தரிக்கோலைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.  ராபர்ட் உறன்ச்ளிப்  (Robert Hinchliffe)  என்பவர்  முதன்முதலில்  தொழிற்சாலை  ஆரம்பித்து  கத்தரிக்கோலைத்  தயாரிக்க முற்பட்டார்.      இருபதாம்   நூற்றாண்டின்  தொடக்கத்தில்  ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால்  நீண்ட காலத்திற்குப்  பயன்படக் கூடிய  மழுங்காத,  கூர்மையான  முனை கொண்ட  கத்தரிக்கோல்கள்  தயாரிக்கப்பட்டன.   தொடர்ந்து, பித்தளையிலும் கனமான  பிளாஸ்டிக்கிலும்  பிடிகள் தயாரிக்கப் பட்டன.   தையல் துறையினருக்கு  உதவியாக  வெறும்  பித்தளையிலும்  கத்தரிக் கோல்கள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு  விற்பனைக்கு  வந்துள்ளன. கத்தரிக்கோல்களில்  பலவகை  உள்ளன. துணி  தைக்கத்   தேவையான, செடி, கொடிகள் வெட்ட, என பல்வேறு வகையான மிகப்  பெரிய  கத்தரிக்கோல்கள்  எல்லாம்    தயாரிக்கப்படுகின்றன. 


 


செ. ஏ. துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,