எழிலூரில்  புதிய குடிநீர் ஆதாரத்தை உருவாக்க ஏரி வெட்டும் திட்டம்

: திருத்துறைப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுனாமிக்கு பிறகு நிலத்தடி நீர் உப்பு நீர் கலந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன எனவே இப்பகுதி மக்கள் கொள்ளிடம் கூட்டு குடிநீர் ரையே  நம்பியே வாழ்கின்றனர் அதேநேரம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டாலோ பராமரிப்பு பணி காலங்களில் குடிநீருக்காக மக்கள் அலையும் நிலை ஏற்படுகிறது திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள மக்கள் கொள்ளிடம் தண்ணீர் வரவில்லை என்றால் குடிநீருக்கு என்ன செய்வது என்ற அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர் இந்நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் நிலத்தடி நீரை மேம்படுத்தவும் குடிநீர் ஆதாரத்தில் ஏற்படுத்தவும்  எழிலூர் பகுதியில் புதிய ஏரியை உருவாக்கிட வேண்டும் குறிப்பாக கோரை ஆற்றிலிருந்து சால்வன் ஆறு  வேத புரத்தில்  இருந்து பிரிந்து மருதவனம் எழில் வங்கநகர் வழியாக ஓவரூரில் கோரையாற்றுடன்  கலக்கிறது இதில் எழிலூரை கடந்து சாலவனாறுசெல்லும் போது சுமார் 50 முதல் 100 மீட்டர் அகலத்துக்கு 7கிலோ மீட்டர் தூரம் வரை பரந்து விரிந்து ஆற்றுப்படுகைகள் உள்ளது எனவே ஆற்றல் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் ஆழத்திற்கு எழிலூரில் ஏரி வெட்டினால் சுமார் 40 மில்லியன் கனமீட்டர் தண்ணீர் சேமிக்க வாய்ப்புள்ள து புதிய ஏரி அமைத்தால் நெடும்பலம் ஆகிய கிராமங்களில் 4850 ஏக்கர் பாசன வசதி பெறும் மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எழிலூரில்  புதிய குடிநீர் ஆதாரத்தை உருவாக்க ஏரி வெட்டும் திட்டத்தை நிறைவேற்றிட ஆவண செய்திட வேண்டும் என்று முன்னாள் MLA. உலகநாதன் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழுத்தலைவர் பாஸ்கர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழுத்தலைவர் அ. பாஸ்கர்


 


செய்தியாளர் பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,