மகளிர் தினம் 83 வயதிலும் கோல்ப் விளையாடி அசத்தும்  வைஜெயந்தி மாலா

தமிழில் இரும்புத் திரை மற்றும் தேனிலவு உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை வைஜெயந்தி மாலா, 83 வயதிலும் கோல்ப் விளையாடி அசத்தியுள்ளார்.


அவர் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியுடன் போட்டி போட்டு ஆடிய நடனக் காட்சி இன்றும் பிரபலமாக எல்லோராலும் வரவேற்கப்படுகிறது.  அந்தக் காட்சிதான் கீழே உள்ள அவரது இளமைக்கால படங்கள்.


என் இளமை காலங்களில் நான் குதிரை சவாரி செய்வேன்.


டென்னிஸ், பூப்பந்து விளையாடுவதும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்த வயதிலும் கோல்ப் விளையாடுகிறீர்களே என பலரும் கேட்கின்றனர். தொடர்ந்து கோல்ப் விளையாடுவதாலேயே, என்னுடைய உடம்பு இன்றைக்கும் கோல்ப் விளையாட வைத்திருக்கிறது. எப்போதுமே கோல்ப் விளையாடுவது பிடிக்கும்; அந்த விளையாட்டை இளம் வயது முதல் நான் நேசிக்கிறேன். என்னுடைய கணவரும் என்னை கோல்ப் விளையாடவிட்டு அதைப் பார்த்து ரசிப்பார்.


 


 இவர் 75க்கும் அதிகமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அவர் தற்போது, கோல்ப் விளையாடுவது போன்ற படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.


தகவல்:  செ.ஏ. துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,