முக்கிய செய்திகள்

1.நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவை மார்ச் 31ம் தேதி வரை ரத்து- இந்திய ரயில்வே அறிவிப்பு


சரக்கு ரயில்கள் வழக்கம் போல் செயல்படும்


2.கரோனா பாதிப்பு முடியும் வரை தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


3.சென்னையில் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா?- வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தீவிரம்


நாளை முதல் வெளிமாநில வாகனங்கள் புதுச்சேரி எல்லைக்குள் நுழைய தடை


- புதுச்சேரி முதல்வர்


4.ரஜினியின் வதந்தி வீடியோவை விமர்சித்ததற்காக தமிழ்நாடு வெதர்மேனுடன் ரஜினி ரசிகர்கள் மோதல்


தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்பை ரஜினி ரசிகர்கள் இழிவாக பேசி விமர்சனம்


தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள் - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் பொளேர்


வரிசையாக ரஜினி ரசிகர்களை பிளாக் செய்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் அதிரடி


5.மக்கள் ஊரடங்கை முன்னிட்டு சென்னையில் வீடுகளில் உள்ள மக்களை மகிழ்விக்கும் வகையில் இசையமைப்பாளர் சத்யன் என்பவர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக 14 மணி நேரம் நேரலையில் பாடி வருகிறார்


சென்னை வடபழனியில் உள்ள தனது ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபடி இவர், ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் நேரலையில் பாடி வருகிறார்.


ஃபேஸ்புக் கமெண்ட பகுதியில் மக்கள் கேட்கும் பாடல்களை பாடும் சத்யன், அவ்வப்போது சிறுசிறு இடைவேளை எடுத்துக்கொண்டு நேரலை இசை நிகழ்ச்சியை தொடர்ந்து வருகிறார்.“


6.நாளை முதல் குறிப்பிட்ட சில பணிகள் மட்டுமே அனைத்து வங்கிக் கிளைகளிலும் நடக்கும் என்று இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது


பணம் எடுப்பது மற்றும் செலுத்துவது, காசோலைகள் பறிமாற்றம், கணக்கில் அல்லாது வேறு வகையான பணம் செலுத்துதல் மற்றும் அரசு சார்ந்த பரிவர்த்தனை பணிகள் மட்டுமே நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இக்கட்டான நிலையில், வங்கிகளுடன் வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


7.வீட்டுக் காவலில் இருந்து சமீபத்தில் விடுதலையான காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கொரோனா வைரசை கட்டுப்படுத்த தனது எம்.பி. நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்