கண்ணுக்குத் தெரியாத தொற்று நோய் எதிரியை விரைந்து விரட்டுவோம்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு
கண்ணுக்குத் தெரியாத கோரோனா தொற்றுக் கிருமியுடன் உலகமே போராடி வருகிறது. உலகில் மொத்தமுள்ள 195 நாடுகளில் சுமார் 185 நாட்டு மக்கள் அந்தத் தொற்றுக் கிருமியுடன் போராட முடியாமல் திணறி வருகின்றன. இந்த தொற்றுக் கிருமியை கட்டுப்படுத்தும் அல்லது பாதிப்புக்குள்ளானோரை குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்க இன்னும் ஓராண்டு ஆகும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தத் தொற்றுக் கிருமி பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கைகளை அடிக்கடி கழுவுதல், நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்தல், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் சமூக தொற்று பெருமளவில் குறைக்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றுக் கிருமி வேகமாக பரவி வந்தாலும் சமூகத் தொற்றாக அது மாறவில்லை அப்படி சமூகத் தொற்றாக மாறாமல் இருக்க இப்பொழுதுதான் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது ஆனால், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இந்தத் தொற்றுக் கிருமியுடன் நடத்தும் போராட்டத்தில் மனித சமுதாயம் வெற்றி பெறமுடியாது என்பதை அனைவரும் உணரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி உள்ளனர். தாமதமானாலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதித்து இருக்கின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு 22-ம் தேதி அன்று நடைபெற்றது. நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அண்டை மாநில எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்த மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கைக் கடுமையாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. தனிமைப்படுத்தப்பட வேண்டிய மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
இவை போதாதென்ற நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை மாலை முதல் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய துறைகள் தவிர்த்து மற்ற அலுவலங்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நோய் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் மார்ச் 31ந் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும மூடவும் இந்த 144 தடையால் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற ‘கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பெற்று, மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்பெறாமல் ஒத்தி வைக்கப்பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்றம் இரண்டு முக்கிய முடிவுகளை அறிவித்திருக்கிறது. 1. இக்கொடிய தொற்று நோய் பரவலைத் தடுக்க ம இந்தியாவில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் இருக்கும் விசாரணைக் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
- டியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதிகளும் வக்கீல்களிலும் அவரவர் இருப்பிடத்திலிருந்தே வழக்கு விவாதங்களை நடத்தலாம்.
. 144 தடை உத்தரவுகளுக்கும், மாவட்ட/மாநில எல்லைகளையும் மத்திய. மாநில அரசுகள் தங்கள் கையில் எடுத்துள்ள சட்ட ஆயுதம், 123 ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேய அரசால் இந்தியாவில் பிப்ரவரி 4 1897-ல் The Epidemic Diseases Act என்ற பெயரில் இயற்றப்பெற்ற சட்டமேயாகும். அப்போதைய பம்பா (இப்போதைய மும்பை) யில் ஏற்பட்ட பிளேக் நோய் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் கூடுவதைத் தடுக்க அரசுக்கு முழு அதிகாரம் தரும் வகையில் இயற்றப்பட்ட மிகச் சிறிய சட்டமாகும் இது.
சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் குஜராத் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் காலரா நோய் பரவுவதைத் தடுக்க இச்சட்டத்தைப் பயன்படுத்தி, மக்கள் கூடுவதைத் தடை செய்தது அரசு.
2015-ல் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரவலைத் தடுக்க சந்திகார் அரசு இச்சட்டத்தைக் கையிலெடுத்தது. அதேபோல் உறினி இன்ப்ளுயன்சா என்னும் நோய் பரவாமல் தடுக்க, 2009-ல் பூனாவில் இச்சட்டத்தின் கீழ் மக்கள் கூடுவது தடுக்கப்பெற்றது.
தற்போது கர்நாடக அரசு இந்திய மாநிலங்களில் முதல் மாந்லமாக மார்ச் 11 முதல் இச்சட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியது. தொடர்ந்து உறரியானா மார்ச் 12-ல் இச்சட்டத்தின் மூலம் மக்கள் கூடுவதைத் தடை செய்தது. மகாராஷடிரா, டெல்லி மற்றும் கோவாவுடன் சேர்ந்து இச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இச்சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கூடுவதைத் தடுக்கலாம், பள்ளிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் செயல்படுவதைத் தடை செய்யலாம், நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாளர்கள் வேலை செய்ய ஆவன செய்யுமாறு ஆலோசனை கூறலாம். தவறான தகவல்களைத் தரும் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் தண்டிக்கப்படவும் வழி வகுக்கிறது.
இச்சட்டத்தின் மூலம் ஆங்கிலேய அரசு சுதந்திரப் போராட்டத் தியாகி பால கங்காதர திலகரர், அவருடைய கேசரி என்ற பத்திரிகையில் பிளோக் நோயைப் பற்றி, அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டார் என்ற காரணம் சொல்லி 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.
கேளிக்கையாகவோ, விளையாட்டாகவோ , பொழுதுபோக்காகவோ எடுத்துக் கொள்ளவோ, மிகவும் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொருவருக்கும், உறவினருக்கும் நோய் தொற்றாமல் இருக்கவும், நோயை விரட்டியடிக்கவும் வீட்டில் அடங்கியிருப்போம். நம் ஒற்றுமையை வெளிக் காட்டுவோம். கண்ணுக்குத் தெரியாத தொற்று நோய் எதிரியை விரைந்து விரட்டுவோம்.
சிறப்பு தகவல் : செ .ஏ .துரை பாண்டியன்
Comments