திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
பேருந்துநிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி, விஏஒ அலுவலகம், கோவில் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வைரஸ் பரவாமல் இருக்க ப்ளீச்சிங் தெளிக்கும் பணி நடைபெற்றது. ஊராட்சி அலுவலகத்தில் உள்ளே நுழைய கைகளை சோப்பு மூலம் கைகளை கழுவிய பின்பு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஊராட்சி துணைத்தலைவர் அமுதா மணிமாறன், ஊராட்சி செயலாளர் சரண்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திவ்யபாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments