உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு பழம்பெரும் தற்காப்புக் கலையான சிலம்பம் பயிற்சி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு   மகளிர் தின சிறப்புகள் குறித்தும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது


 


 


. இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு பழம்பெரும் தற்காப்புக் கலையான சிலம்பம் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காலையில் 10.30 மணி முதல் 1.00 மணி வரையிலும் மதியம் 2 .10 மணி முதல் 4 .20 வரை வீராபுரம் பள்ளியிலும் இந்த வகுப்புகள் கொடுக்கப்பட்டது


இந்த பயிற்சியில் 110க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் இந்த பெயர்ச்சியில் பெண் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த 110 குழந்தைகளில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்களுக்கு இந்த தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த தற்காப்பு கலையான சிலம்ப பயிற்சி ஆசிரியர் ராமையா மற்றும்  சியான் ராஜ் மிக சிறப்பாக குழந்தைகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுத்தனர். 


 


தகவல் அல்லாபகஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,