வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்



 


வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக இந்துக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி அன்று தங்களது துன்பங்கள் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என மக்கள் நம்புகின்றனர். நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இனிப்பு போல, ஹோலிப் பண்டிகைக்கு சிறப்பு சேர்ப்பது வண்ணங்கள் தான். வடமாநிலங்களில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வண்ணங்களின் திருநாளாம் ஹோலிப் பண்டிகையை அரசியல் தலைவர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் இன்று கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.பொதுமக்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


 


தகவல் மஞ்சுளாயுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,