இன்று உலக சிட்டுக் குருவி தினம்,

           இன்று உலக சிட்டுக் குருவி தினம்,


                 சிட்டுக்குருவியின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்படுகிறது.                உலகின் வெவ்வேறு இடங்களில் 2010 முதல் சிட்டுக் குருவி தினம் கொண்டாடப்பட்டது.


               சிட்டுக்குருவி சின்ன வயதில் சிட்டுக்குருவிகள் தினமும் எங்கள் வீட்டுக்கு வரும். கீச் கீச் என்று அவை எழுப்பும் ஒலி கேட்டு காலையில் முழிப்பு வரும். அவை வருவதை கண்ட நான் அவைக்கு உணவு வைத்தேன். எனவே தினமும் வர தொடங்கின. ஆனால் வரும் உணவருந்தி விட்டு சென்று விடும். எங்கள் தந்தையிடம் சிட்டுக்குருவி காலையில் வந்து மாலையில் எங்கோ போய்விடுகிறது. ஏன் நம் வீட்டில் தங்காதா என கேட்டேன். உடனே எங்கள் தந்தை ஒரு சிறு கூடு தயார் செய்து வைத்தார். அதை கண்டதும் மகிழ்ச்சி அடைந்த சிட்டுக்குருவிகள் அங்கு வைக்கோல் பஞ்சு போன்றவைகளை கொண்டு வந்து வைத்து அங்கேயே உறங்க ஆரம்பித்து விட்டது. அவை கீச் கீச் என்று சத்தமிடும். உடனே அம்மா உணவு பொருள்களை பால்கணியில் வைப்பாங்க. கூட்டமாக வந்து சாப்பிட்டு விட்டு கூட்டுக்குள் இருக்கும் அதன் குஞ்சுகளுக்கும் உணவு பொருட்களை கொண்டு போய் ஊட்டும்.


                நாங்கள் சாப்பிடும் போது சில சமயங்களில் எங்கள் தட்டில் இருந்து பயமில்லாமல் உணவை உண்ணும். ரொம்ப காலம் அவை தங்கி இருந்தது. அம்மா சிட்டுக்குருவி பத்தி நிறைய கதைகளை சொல்லுவாங்க. இப்ப எல்லாம் சிட்டுக்குருவி பார்க்க முடியவில்லை. காடுகளை அழித்து கட்டடங்கள் கட்டியபின் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதனால் அதன் எண்ணிக்கை அதிகரிக்க பலரும் இன்றைய நாளில் தங்கள் வீடுகளில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். அப்போது எல்லாம் நாங்கள் காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பதில்லை.


               சிட்டுக் குருவிகளின் சத்தம்தான் காலை நேர அலாரமாக இருக்கும். கோடையில் தண்ணீர் இல்லாமல் பல சிட்டுக் குருவிகள் இறக்கின்றன. ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் ஒரு கிண்ணத்தில் தானியங்கள் வைப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள் .


             சிட்டுக்குருவி தினமான இன்று அவைகளை காக்க உறுதி எடுங்கள்.


மஞ்சுளாயுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,