திருத்துறைப்பூண்டியில் கொரோனாவைரைஸ் முன்னெச்சரிக்கை பணிகளை நகராட்சி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பொறுப்பு அலுவலர் வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் ஆய்வு
திருத்துறைப்பூண்டியில் கொரோனாவைரைஸ் முன்னெச்சரிக்கை பணிகளை நகராட்சி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பொறுப்பு அலுவலர் வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் ஆய்வு செய்தார்.
திருத்துறைப்பூண்டியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர், கொரோனா கட்டுப்பட்டு பொறுப்பு அலுவலர் சிவகுமார் தலைமையில் நகராட்சி ஆணையர் (பொ) சந்திரசேகரன், நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சாருமதி, நடமாடும் மருத்துவ குழு டாக்டர் முகைதீன், ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதர நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கெளரி , நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் பாரதமாதா ஆதரவற்றோர் முதியோர் இல்லம், புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதி, புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் இயங்கும் கொரோனா தொற்றுநோய் நீக்கும் மையம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்து தன் சுத்தம், கைகளை சுத்தம் செய்வது, கிருமிநாசினி தெளித்தல் , நோய் பரவாமல் தடுத்தல், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்குறித்தும் ஆதரவற்றோர் முதியோர் இல்லம், மாணவியர் விடுதிகளில் தங்கி உள்ளவர்களுக்கு அறிவுறுத்தி, கைகழுவுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் கண்டறியும் கருவி மூலம் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை விடுதி மற்றும் முதியோர் இல்லங்களில், புதுபஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் மருத்துவ குழுவினர் சோதனை மேற்கொண்டார். செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments