சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் மணல் சிற்பம்

சென்னையில் காற்று மாசு குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘கிரீன்பீஸ் இந்தியா’ அமைப்பு சார்பில், சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் மணல் சிற்பம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சிற்பத்தை ஒடிசா கலைஞர் சுபாலா என்பவர் வடிவமைத்து இருக்கிறார். இதில் ரிப்பன் மாளிகை, வள்ளுவர் கோட்டம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.


 


 

அதன் கீழே ‘சென்னைக்கு சுத்தமான காற்று தேவை’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. ஏராளமான தன்னார்வலர்கள் உதவியுடன் கடந்த ஒரு வாரத்தில் இந்த மணல் சிற்பம் தயாராகி இருக்கிறது. இந்த சிற்பத்தை கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் வியந்து பார்க்கிறார்கள். பொதுமக்களிடமும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் தன்னார்வலர்கள் வழங்கி வருகிறார்கள்.

 

. காற்று மாசுவை குறைக்கவேண்டிய கடமை பொதுமக்களுக்கு உள்ளது. டயர், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை எரிக்கக்கூடாது. முடிந்தவரை மோட்டார் சைக்கிள், கார்களை பயன்படுத்தாமல் சைக்கிள் அல்லது பொதுபோக்குவரத்தை நாடுவது போன்றவற்றை பொதுமக்கள் கடைபிடித்தாலே அது பெரியளவில் நன்மை பயக்கும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,