பெண் மகளிர் தின கவிதை

                                        பெண் 


 


கவிதை


பூக்கள் செய்யத் தொடங்கியது பூமி 
பெண்ணைக் கண்ட பின்தான் 


பெண் பாதம்படும் போதுதான்
பொறுமை பற்றித் தெரிந்து கொள்கிறது மண் 


நிலா நட்சத்திரம் சூரியன் தேவையில்லை 
போதும் 
பெண் புன்னகை 


கரும்பு கனி தேன் இனிப்பெனச் சொல்லாதே  
பெண்ணின் வார்த்தைகள் இருக்கும் போது 


பெண் குழந்தை வெறுப்பவன்  
சாத்தானின் நெருங்கிய நண்பன்


பெண் புன்னகை எடுத்து தண்ணீரில் கலந்தால் 
கிடைக்கும் பால் 


பெண் பாவம் 
பெண் கோபம் கண்ட தீகூட நடுங்கும் 


பெண் சாபத்தால்
 முற்றத்துச் செடிகளில் கூட எரியும் நெருப்பு 


 உலகை அழகாக்க வந்த வரம் 
பெண் 


 அட்டை 
பெண்ணின் சீதனம் உண்பவன் 


தாய் என்று சொன்னால் தீர்ந்து போகும் 
செய்த பாவங்கள் அனைத்தும் 
 
ஆலயம் வணங்க வேண்டுமென்று விரும்பினால் 
அது  தெரிவு செய்யும் தாயை 


-ராஜகவி ராகில்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி